மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல்!
வயல் உழ வந்தாய்
எருவேற்றிக் கொண்டுபோக வண்டில் இழுத்தாய்
சுற்றிச் சுற்றி வந்து சூடடித்த்தாய்
சாணம் தந்தாய் எருவாக
நெல்லும் வைக்கலும் ஏற்றி வந்தாய்
இன்னும் எத்தனை எத்தனை செய்தாய்
நன்றி மறப்பவரோ தமிழர்
உனக்காக ஒரு நாள் மாட்டுப்பொங்கல் செய்கிறோம்
பொன் அருள் -16/01/2016.