சுரேஷ்வால்மீகி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ்வால்மீகி
இடம்:  சென்னை (திருநெல்வேலி)
பிறந்த தேதி :  06-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Dec-2015
பார்த்தவர்கள்:  201
புள்ளி:  54

என்னைப் பற்றி...

எழுத்தாளர்,திரைப்பட இணை இயக்குநர் sureshvalmeki@gmail.comசெல்பேசி : 97899 06079

என் படைப்புகள்
சுரேஷ்வால்மீகி செய்திகள்
சுரேஷ்வால்மீகி - தினேஷ் ஜே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2016 2:49 pm

நிஜத்தில் பிரிந்து
நினைவுகளில் வாழ்கிறேன்...

அந்திம
காலத்தின் அழைப்பில்
கடவுளுக்கும்
காதலிக்கும் தான்
என் உயிர்...!

அன்பே...
சொந்தங்களுடன் என்றும் என்
சொந்தமாக வேண்டும்
நீ...

வாராயோ...!

மேலும்

அழகான கவி....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்....நண்பா... 22-Aug-2016 8:43 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரரே... 22-Aug-2016 3:07 pm
காதல் பேசும் களங்கமில்லா கவிதை... ஏதோ அனுபவம் தெறிக்கிறது... வாழ்த்துகள்...! 22-Aug-2016 3:03 pm
சுரேஷ்வால்மீகி - சுரேஷ்வால்மீகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 4:49 pm

அவனியில் ...

அன்பமுதே
அமுதவீரமே
வீரஅழகே - எம்
வெல்லும் தமிழ் ..!

அதுபோல் ;

அனைத்தும்
ஒருங்கே பெற்றாள் - என்
பைங்கிளியாள் ..!

* கணினியுகமும் - என்றும்
காலடி தொழுது நிமிரும்
தேன்கனியாள்..!

* அந்த
முக்கனியும் கசக்கும் - இவள்
வெட்கச்சிரிப்பில் ;

பிழை கண்டால்...

புறநானூறும் மிரளும் - இவள்
நெருப்பு விழியில் ..!

* என்
இதயமாய்
இருக்கிறாள் வம்புக்காரியாய் ;

சிறுக்கி ,

சில காலமாய்
இதமாய்க் கடிக்கிறாள்
வண்டுக்காரியாய் ..!

* சூரியகாந்தியிவள்
பார்த்தாலே போதுமே
கொதிக்கும

மேலும்

அழகிய கன்னி தமிழுக்கு நிகர் எதுவும் உண்டோ? சொல் இலக்கணம்! 11-Jul-2016 5:30 pm
கருத்துகளுக்கு கனிவான நன்றிகள்..! 20-Jun-2016 2:55 pm
வார்த்தைகளின் அழகை போல் கவிக்குள் தமிழ் மகளும் பேரழகு 19-Jun-2016 5:16 am
அருமை.... அருமை.... அழகியத் தமிழ் மகள் அழகாய் வரிகளில் வாழ்த்துக்கள் .... 18-Jun-2016 6:50 pm
சுரேஷ்வால்மீகி - புகழ்விழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 12:51 am

பெற்றவளை அறிந்தேன்
படைத்தவனை அறியவில்லை !

நான் வளர்ந்ததை அறிந்தேன்
நான் வளர்ந்த பாதையை அறியவில்லை !

கவிதையின் முதல் படியை அறந்தேன் - என்
கவிதையின் இறுதி வரிகளை அறியவில்லை !

என் நிகழ்காலத்தை அறிந்தேன்
என் எதிர்காலத்தை அறியவில்லை !

மடயர்களை என் வாழ்வில் அறிந்தேன்
மகான்களை நான் அறியவில்லை !

உயிர் கொடுத்தவனை அறிந்தேன்
உயிர் எடுப்பவனை அறியவே இல்லை !

அறிந்தவை சில. !
அறியாதவை பல. !

மேலும்

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே 18-Jun-2016 11:42 pm
நன்றி தோழமையே 18-Jun-2016 11:41 pm
அரிவை... அறியாமை அறிவை ; அறியட்டும்..! தன்னடக்கக் கவி..! 18-Jun-2016 5:13 pm
உண்மைதான்..வாழ்க்கை என்றால் என்ன என்பதையே நாம் இன்னும் அறியவில்லை 18-Jun-2016 5:31 am
சுரேஷ்வால்மீகி - திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 1:32 am

அந்(தி)த முகம் -
--------------------;----;
-திருமூர்த்தி

பொன்னந்தி பழுத்து
மஞ்சள் சிந்துகிறது...

மல்லிகை குலுங்கும்
தென்றலில் மிதந்து
வருகிறாள்...

வெறுமை குழைத்து
முகத்தில் தடவி
கடக்கிறேன் அவளை...

அந்த ஓடையில்
யாரோ பாடியவண்ணம்
இருக்கிறார்கள்...

சட்டென நின்று
மூழ்கிவிடுகிறேன்
அதன் தாளகதியில்...

நானும் அந்தக் கூழாங்கற்களை
எடுத்து வாயில் போட்டுக்கொண்டு
நீரள்ளிப் பருகி பாடுகின்றேன்...

நழுவும் சுருதியில்
அஸ்தமிக்கிறது தூரத்து
வீட்டுச் சாளரத்தில்
நுழையும் அந்தி...

இருள் மலரும்
அந்த மருள்மாலையில்
அவள்மட்டும் அந்தியாகவே

மேலும்

வஞ்சியவள் அந்தியானாள்..! நற்கவி..! 18-Jun-2016 5:08 pm
அருமை.... வாழ்த்துக்கள் .... 18-Jun-2016 11:43 am
உண்மைதான்...கோபம் கொள்ளும் பெண்ணும் வெட்கப்பட்டாள் குழந்தை போல் ஆகிறாள் 18-Jun-2016 5:18 am
சுரேஷ்வால்மீகி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2016 4:49 pm

அவனியில் ...

அன்பமுதே
அமுதவீரமே
வீரஅழகே - எம்
வெல்லும் தமிழ் ..!

அதுபோல் ;

அனைத்தும்
ஒருங்கே பெற்றாள் - என்
பைங்கிளியாள் ..!

* கணினியுகமும் - என்றும்
காலடி தொழுது நிமிரும்
தேன்கனியாள்..!

* அந்த
முக்கனியும் கசக்கும் - இவள்
வெட்கச்சிரிப்பில் ;

பிழை கண்டால்...

புறநானூறும் மிரளும் - இவள்
நெருப்பு விழியில் ..!

* என்
இதயமாய்
இருக்கிறாள் வம்புக்காரியாய் ;

சிறுக்கி ,

சில காலமாய்
இதமாய்க் கடிக்கிறாள்
வண்டுக்காரியாய் ..!

* சூரியகாந்தியிவள்
பார்த்தாலே போதுமே
கொதிக்கும

மேலும்

அழகிய கன்னி தமிழுக்கு நிகர் எதுவும் உண்டோ? சொல் இலக்கணம்! 11-Jul-2016 5:30 pm
கருத்துகளுக்கு கனிவான நன்றிகள்..! 20-Jun-2016 2:55 pm
வார்த்தைகளின் அழகை போல் கவிக்குள் தமிழ் மகளும் பேரழகு 19-Jun-2016 5:16 am
அருமை.... அருமை.... அழகியத் தமிழ் மகள் அழகாய் வரிகளில் வாழ்த்துக்கள் .... 18-Jun-2016 6:50 pm
சுரேஷ்வால்மீகி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2016 2:51 pm

* மலர்களில்
மல்லிப்பூவவள் ;

ஆம்
மல்லியானவளால்
மல்லிக்கழகு..!

* ராகங்களில்
எட்டாம் ஸ்ருதி ;

ஆம்
ஏழிசை கடந்ததால்
ஸ்ருதிக்கழகு..!

* என்றும்
குலமகள் சூடும்
மல்லிப்பூ;

இதோ ...
நட்சத்திர விடுதியில்
வேசிகளுக்கும் ..!

* வேசியும்
பெண்தானே;
பேராசை கொன்றிட
இயலாமையின்போது ..!

ஆயினும்
ஏனோ
நாற்றமெடுக்கிறது
மல்லிப்பூ ...

அன்று
அறியாமல்
நேசித்தவனுக்கு;

இன்றும்
இலக்கை நோக்கிய
நடைபாதையில்..!

மேலும்

மிக அருமைங்க..மனிதனின் உள்ளத்து உணர்வுகள் என்றும் பெறுமதியானவை தான்..ஆனால் காலங்கள் அதையும் உலகின் மடியில் சிலருக்குத்தான் நினைவாக்கி கொடுக்கிறது பலருக்கு காயங்களை தான் தினமும் எரிக்கிறது 17-Jun-2016 2:55 pm
சுரேஷ்வால்மீகி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2016 4:26 pm

பருவத்திற்கு வந்து
பல காலமாயிற்று ..!

இளையவளை
செல்லமே... என
கூப்பிட்டிருந்தால்
குழைந்திருப்பாள் ..!

குட்டியம்மா... என
கூப்பிட்டிருந்தால்
கொஞ்சியிருப்பாள்..!

அம்முக்குட்டி ...என
கூப்பிட்டிருந்தாள்
அணைத்திருப்பாள்..!

மாடர்ன் லைஃ பில்
கொட்டிக் கிடக்கிறதே
பிக் நேம் ..!

அழகானவளை
பேர் சொல்லி
கூப்பிட்டு விட்டேன்..!

இன்றுதான்
புரிந்தேன் ,
இதுவும்
என் பலம் ;

யார்யாரோ
கூப்பிட்டவர்
குரலுக்கெல்லாம் - அவள்
பலவீ னமாகும்போது ..!

மேலும்

வாழ்க்கை மேலாண்மைக் கவிதை பாராட்டுக்கள் 17-Jun-2016 6:40 pm
சிலரின் நிலைகளில் தாமதமும் புதுமையை இருளாக்கி போகிறது 15-Jun-2016 11:33 pm
சுரேஷ்வால்மீகி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2016 5:47 pm

(புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய
' தமிழுக்கும் அமுதென்று பேர்..." என்ற பாடலின் சந்தங்களில்...)

தொகையறா
*******************
ஆயிரம் பிறவி எடுத்தாலும்
அசுர தவமாய் நின்றாலும்
ஐந்து பூதமும் வென்றாலும்
அரிதான வரமன்றோ தமிழ் ...வீரத்தமிழ்...

பல்லவி
***************
தாய்மைக்கும் தமிழென்று பேர் - நம்
தாய் ஊட்டும் அமுதெல்லாம் தமிழுக்கு நேர்...தமிழுக்கு நேர் ...
தாய்மைக்கு அன்பென்று பேர் - தமிழா
தாய் சொல்லே வேதம்தான் வாகைக்குத் தேர்.

மேலும்

அருமையான வரிகள் ! அழகானப் பாடல் ! 02-Jul-2016 7:28 pm
போற்றுட்கற்குரிய கவிதை பாராட்டுக்கள் 17-Jun-2016 6:37 pm
நன்றி சர்பான் ..! 15-Jun-2016 3:17 pm
ஆஹா மிக அருமையான காவியம் 15-Jun-2016 5:33 am
சுரேஷ்வால்மீகி - சுரேஷ்வால்மீகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2015 4:28 pm

*கருணையும் நீயே ..
கர்வமும் நீயே ..
புழுதியில் வீணை எரியுதே ..!

*வெண்ணிலா பார்த்த
வெப்பத்தில் கருகி- என்
இதயமும்
இங்கு தவிக்குதே ..!

*ஈரமே இல்லையோ..
இரு விழிகள்
இன்னமும் கொல்லுமோ..

* வாலிபம் சாபமோ ..
அணு அணுவாய்
சாவதென் ஜென்மமோ..

*உன்னையன்ரிய வாழ்க்கை என்பது
எனக்கு கிடையாதடி ..
கோடி நூற்றாண்டு ஆன போதிலும்
வார்த்தை மாறாதடி..

மேலும்

தோழரே விரைவில் உயரத்தை அடைவீர்கள். காரணம் திரு சங்கரன் அய்யா அவர்கள், திரு. மதிபாலன் அவர்கள், திரு சர்பான் அவர்கள் ஆகியோரின் கருத்துகளே போதும் 09-May-2016 6:46 pm
ஒரு திரைப்பாடலுக்குண்டான லாவகம் தெரிகிறது. பாராட்டுகள் ! 28-Dec-2015 9:29 pm
கண்மணி பேசுவாள்... சந்தேகம் எதுவுமில்லை...!!! தோழா கவிதை அருமை 21-Dec-2015 8:33 pm
மிக்க நன்றிகள் கவின்... 14-Dec-2015 5:57 pm
கார்த்திகா அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Dec-2015 3:50 pm

என்றாவது வரும் மைனாக்கள்
என் கிளையிலேயே
தங்கி விட்டன இன்று
உந்தன் வருகை அதற்கும்
தெரிந்திருக்கும்

நீ நான்
ஒன்றாகி நடக்கிறோம்
வெட்கத்தில் நம்மை விட்டு
தூரம் சென்றன நிழல்கள்

என் தலை முடி
கலைவதாய் எண்ணிய
சில நொடிகளிலேயே
திரும்பி விடுகிறது அது
உன் இதழ் தொட்டிருக்கும்

உன் பெயரை உச்சரித்தால்
இசையாய் உள்நுழைந்து
இதழ்களில் குறுஞ்சிரிப்பை
திறவு செய்கிறது

உள்ளங்கை ரேகை அளக்கும்
உன் விரலிடுக்குகளில் நுழைந்து
இன்னும் குளிர்கிறது
சிறு மழைத் துளி

சென்ற வசந்தத்தில்
நீ தூவிய
பூ விதைகள்
முளைவிட்டிருக்கின்றன
நான் அறியாதது இது!

உன் பாதச் சுவடுகளை

மேலும்

ஹ ஹ ஹா.....மிக்க நன்றி நட்பே...மிக்க மகிழ்ச்சி... 12-Dec-2015 10:53 pm
மிக்க நன்றி அண்ணா... 12-Dec-2015 10:53 pm
ம்ம்ம்ம்ம் ..... கொஞ்சம் இனிப்பு அதிகமாகிறது ,,,, வாழ்த்துகள் ...! 12-Dec-2015 10:38 pm
அழகான படைப்பு... மிகவும் இனிமையாக இருக்கு.... 12-Dec-2015 10:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

இவர் பின்தொடர்பவர்கள் (23)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
senthu

senthu

madurai
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (11)

தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.
செ நிரஞ்சலா

செ நிரஞ்சலா

களுத்துறை(இலங்கை)
மேலே