களங்க ஒலி

* மலர்களில்
மல்லிப்பூவவள் ;

ஆம்
மல்லியானவளால்
மல்லிக்கழகு..!

* ராகங்களில்
எட்டாம் ஸ்ருதி ;

ஆம்
ஏழிசை கடந்ததால்
ஸ்ருதிக்கழகு..!

* என்றும்
குலமகள் சூடும்
மல்லிப்பூ;

இதோ ...
நட்சத்திர விடுதியில்
வேசிகளுக்கும் ..!

* வேசியும்
பெண்தானே;
பேராசை கொன்றிட
இயலாமையின்போது ..!

ஆயினும்
ஏனோ
நாற்றமெடுக்கிறது
மல்லிப்பூ ...

அன்று
அறியாமல்
நேசித்தவனுக்கு;

இன்றும்
இலக்கை நோக்கிய
நடைபாதையில்..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (17-Jun-16, 2:51 pm)
பார்வை : 77

மேலே