புதுக்காவியம்

குரலமுது கேட்டுக் குழைந்து விட்டு, அருகினிலே உனைக் கண்ட பின்னும் பிழைப்பேனோ?
துயில் கொள்ள மறுக்கும் இரவுதனில், உன் நினைவுகளும் அகல மறுப்பேனோ?
முகம் காண இயலாதெனினும், நீயிருக்கும் திசை நடக்கும் பாதங்களை வெறுப்பேனா?
தேவதை,
நீ எனைக் காதலிப்பாய் என ஆயுள் முழுதும் பொறுப்பேனா?

வள்ளுவருக்கு அழகுக்காய் அதிகாரம் அளித்தவள் நீதானா?

இளங்கோவடிகளுக்கு கண்ணகியாய் சிலப்பதிகாரம் தந்தவளும் நீதானா?

உன் குரல் வழியே தமிழ் மொழி செழிக்கக் கண்டேனே...!

உன்னால் இனியொரு புதுக்காவியம் படைப்பேனோ என்று வியந்தேனே...!

எழுதியவர் : பாலகுமார் (17-Jun-16, 3:05 pm)
Tanglish : puthukkaaviyam
பார்வை : 170

மேலே