முத்தங்களால் ஆவதென்ன அன்பே

மலையில் உதிக்கும்
..நீ்ர் ஊற்றுகள்,
நிலையின்றி வழிந்து
..ஆறாகும் - ஆறும்
தொலைதூரம் வளைந்தோடி
..கடலில் கலக்கும்,
எதுவும் இங்கு
..தனிமையில்லை!

உயர்ந்த மலைகள்
..வானை முத்தமிடும்,
அலைகள் ஒன்றுடன் ஒன்று
..கை குலுக்கும்,
சூரியனும் சுடரொளியால்
..பூமியை முத்தமிடும்,
நிலவும் அடிவானத்தில்
..கடலை முத்தமிடும்!

இத்தனை முத்தங்கள்
..பாரினிலே
நித்த நித்தம்
..இருக்கையிலே - அந்த
முத்தங்களால்
..ஆவதென்ன அன்பே
முத்தங்கள் எனக்கு நீ
..தரவில்லை எனில்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-16, 3:42 pm)
பார்வை : 126

மேலே