மானிடன் அறியாதவை

பெற்றவளை அறிந்தேன்
படைத்தவனை அறியவில்லை !

நான் வளர்ந்ததை அறிந்தேன்
நான் வளர்ந்த பாதையை அறியவில்லை !

கவிதையின் முதல் படியை அறந்தேன் - என்
கவிதையின் இறுதி வரிகளை அறியவில்லை !

என் நிகழ்காலத்தை அறிந்தேன்
என் எதிர்காலத்தை அறியவில்லை !

மடயர்களை என் வாழ்வில் அறிந்தேன்
மகான்களை நான் அறியவில்லை !

உயிர் கொடுத்தவனை அறிந்தேன்
உயிர் எடுப்பவனை அறியவே இல்லை !

அறிந்தவை சில. !
அறியாதவை பல. !

எழுதியவர் : புகழ்விழி (18-Jun-16, 12:51 am)
பார்வை : 105

மேலே