இரவு என்ற கருத்த மனிதனின் வியர்வைத் துளிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
பிரபஞ்சம்
வானச்சிலேட்டில்
போட்டுப் பார்த்த
கூட்டல் கணக்கு
இரவின் வீதிகளில்
கடை வைத்திருப்போர்
வைத்திருக்கும்
லாந்தர் விளக்கு
ஆகாயக் கோட்டையின்
கதவில் தொங்கும்
அழகு மணிகள்
இரவு ..
என்ற கருத்த மனிதனின்
வியர்வைத் துளிகள்
விரிந்த பிரபஞ்சத்தின்
விண்ணுலக
மைல் கற்கள்.
கண்சிமிட்டி விளையாடும்
கந்தர்வ கன்னிகள்.
காலமெல்லாம்
எரியும்
கார்த்திகை தீபங்கள்
இரவெனும்
ஆலமரத்தில்
பழுத்த
அத்திப் பழங்கள்.
இரவு வானில்
விதைக்கப் பட்ட நெல்மணிகள்
இரவாத இந்த மின்மினிகள் !