பரதகவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பரதகவி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 219 |
புள்ளி | : 33 |
கவிஞர். எனது முதல் கவிதை எனது பதினேழாவது வயதில் `சோலைக்குயில்கள்' கவிதை நூலில் பிரசுரமாயிற்று. `அன்பின் அரண்மனை' நான் எழுதிய கவிதை நூல். ஆங்கில பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகிறேன்..
இசை வண்ணம்!
கண்களும் காதுகளும் கொளரவம் பெறும்
பறப்பதால் இது பறவை..
இசைப்பதால் மனதில் கொணரும் இசைவை.
பறவையோலி கேட்காத காலை
மலர்கள் இல்லாத தோட்டம் !
பூமி ஒன்றெனும் தத்துவத்தை சொல்லும்
வலசை போகும் பறவைக் கூட்டம்.
ஒவியமும் இசையும் கலந்த இந்தக் கலவை
ஆகாயத்தை எட்டிப் பிடித்து விட்ட இனிமை.
இசை வண்ணம்!
கண்களும் காதுகளும் கொளரவம் பெறும்
பறப்பதால் இது பறவை..
இசைப்பதால் மனதில் கொணரும் இசைவை.
பறவையோலி கேட்காத காலை
மலர்கள் இல்லாத தோட்டம் !
பூமி ஒன்றெனும் தத்துவத்தை சொல்லும்
வலசை போகும் பறவைக் கூட்டம்.
ஒவியமும் இசையும் கலந்த இந்தக் கலவை
ஆகாயத்தை எட்டிப் பிடித்து விட்ட இனிமை.
இவை
இரவு தேவதையின்
சீமந்த புத்திரர்கள்
பகல் என்ற ஆசிரியரை
கண்டு விட்டால்
பதுங்கி விடும் மாணவர்கள்
இந்த பளிச்சென்று
உடையணிந்த அண்ணன் தம்பிகள்
கோடான கோடிக்களுக்கு மேல்
இவர்கள் அழகான பெண்களைப் போல..
தூரத்திலிருந்து பார்த்திருக்கும் போது
இனிமையாய் சிரித்திருப்பர்
அருகே போய்விட்டால்
அனலாக மாறி விடுவர்
கண்களை கணலாக மாற்றி விடுவர்.
இந்த அழகிய
கண்கள் மைதீட்டிக் கொண்டதினால்
தான் இனிய இரவு உருவாகியிருக்கிறது
இந்த எழில் மிகு பெண்கள் சூரிய ராஜனைக்
கண்டு நாணமுறுவதால் தான்
பகலில் வெளிவராமலிருக்கிறார்கள்.
இவை
இரவு தேவதையின்
சீமந்த புத்திரர்கள்
பகல் என்ற ஆசிரியரை
கண்டு விட்டால்
பதுங்கி விடும் மாணவர்கள்
இந்த பளிச்சென்று
உடையணிந்த அண்ணன் தம்பிகள்
கோடான கோடிக்களுக்கு மேல்
இவர்கள் அழகான பெண்களைப் போல..
தூரத்திலிருந்து பார்த்திருக்கும் போது
இனிமையாய் சிரித்திருப்பர்
அருகே போய்விட்டால்
அனலாக மாறி விடுவர்
கண்களை கணலாக மாற்றி விடுவர்.
இந்த அழகிய
கண்கள் மைதீட்டிக் கொண்டதினால்
தான் இனிய இரவு உருவாகியிருக்கிறது
இந்த எழில் மிகு பெண்கள் சூரிய ராஜனைக்
கண்டு நாணமுறுவதால் தான்
பகலில் வெளிவராமலிருக்கிறார்கள்.
இந்திர உலகத்தில்
எரியும் ..
மந்திர விளக்குகள் !.
சந்திரனோடு
நாளும்..
சந்தோஷமாய் கூடி பழகிடும்
சக நண்பர்கள்.
இவை கண்சிமிட்டி காதலாகி
கசிந்துருகியிருப்பது..
பூமிப் பெண்ணின்
புகழ் பெற்ற
பேரழகினைக் கண்டு தான்!..
இரவின் கானகத்திற்குள்..
இரை தேடி அலைகிறது .
இந்தப் புள்ளிமான் கூட்டம் ...
சூரியச் சிங்கம்
தன் பிடரி சிலிர்ப்பி
வந்து விட்டால்..
இவை கண்ணிமைக்கும்
நேரத்தில் ஓடி
கண்களிலிருந்து
அகன்று போகின்றன!.
இவை ஓளி ஆண்டுகள்
பல ஊடுருவி வந்த
உளவாளிகளா.?.
வானம் எனும்
பூமியின்
திண்ணையில்
தினம் வந்து நின்று ..
நலம் விசாரித்துப் போகும்
தேவலோகத்து
இந்திர உலகத்தில்
எரியும் ..
மந்திர விளக்குகள் !.
சந்திரனோடு
நாளும்..
சந்தோஷமாய் கூடி பழகிடும்
சக நண்பர்கள்.
இவை கண்சிமிட்டி காதலாகி
கசிந்துருகியிருப்பது..
பூமிப் பெண்ணின்
புகழ் பெற்ற
பேரழகினைக் கண்டு தான்!..
இரவின் கானகத்திற்குள்..
இரை தேடி அலைகிறது .
இந்தப் புள்ளிமான் கூட்டம் ...
சூரியச் சிங்கம்
தன் பிடரி சிலிர்ப்பி
வந்து விட்டால்..
இவை கண்ணிமைக்கும்
நேரத்தில் ஓடி
கண்களிலிருந்து
அகன்று போகின்றன!.
இவை ஓளி ஆண்டுகள்
பல ஊடுருவி வந்த
உளவாளிகளா.?.
வானம் எனும்
பூமியின்
திண்ணையில்
தினம் வந்து நின்று ..
நலம் விசாரித்துப் போகும்
தேவலோகத்து
கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..
அப்படி.. வ
ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்
ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்
நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.
இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!
ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்
ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்
நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.
இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!
ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்
ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்
நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.
இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!
அந்திக் கன்னியோ!
கருமை நிறச்சேலை புனைந்திட
விண்ணெல்லாம் விண்மீன்கள்
நிலாவை உலா வருகின்றன...,
பொய்கையை வழித்தெடுத்து
வீசும் தென்றல் -மலரிடம்
காதல் சொல்லும் பூக்காம்பு..,
தூங்காத காதலர்களின்
நேசக் கவிதைக்கு -நிலா காகிதம்,
இருள் தூரிகை..,
ஈன்றெடுத்த அம்மா பிள்ளையை
பாசயலையில் தூங்காது கண்
விழித்து காப்பாள் -ஒருநாள் வாழும்
மின்மினிபூச்சிகளுக்கு இந்த
இரவு தான் உயிர் நிலைக்கும் ஜென்மம்
நந்தவன பச்சைக்கிளி
காதல் கொண்டு கீச்சிடும்.
காட்டுமூங்கில் புல்லாங்குழலால்
பாணன் வாசிக்கும் நள்ளிரவு இசைக்கு
நிலா சுதி..,விண்மீன் சரணம்
குளிர் பல்லவி..,இருள் அழகு..!