இனிமை முதல்வன்

ஆகாயக்குமாரன்..
அருமை நிலவன்..
கவிதைப் புலவன்..
இனிமை முதல்வன்
ஒளியின் தலைவன்..
வழி சொல்லும் வசந்தன்..
இரவின் யாத்ரீகன்.
உறவின் மாந்திரீகன்
நட்சத்திரங்களின் நண்பன்
நாளின் முடிவில் வரும் இன்பம்..
ஒளி கொட்டும் ஒர் அருவி.
இரவில் பறந்து திரியும் வெள்ளைக் குருவி.
இரவு பெற்ற ஞானம்
வானம் தரும் தானம்
பூமி இதுவில்லாமல் ஊனம்.
நிலவு பூத்த வானம்..
இயற்கையன்னையின் வேதம்!