காதலாய் தவறுகிறாய் -கார்த்திகா

என்றாவது வரும் மைனாக்கள்
என் கிளையிலேயே
தங்கி விட்டன இன்று
உந்தன் வருகை அதற்கும்
தெரிந்திருக்கும்

நீ நான்
ஒன்றாகி நடக்கிறோம்
வெட்கத்தில் நம்மை விட்டு
தூரம் சென்றன நிழல்கள்

என் தலை முடி
கலைவதாய் எண்ணிய
சில நொடிகளிலேயே
திரும்பி விடுகிறது அது
உன் இதழ் தொட்டிருக்கும்

உன் பெயரை உச்சரித்தால்
இசையாய் உள்நுழைந்து
இதழ்களில் குறுஞ்சிரிப்பை
திறவு செய்கிறது

உள்ளங்கை ரேகை அளக்கும்
உன் விரலிடுக்குகளில் நுழைந்து
இன்னும் குளிர்கிறது
சிறு மழைத் துளி

சென்ற வசந்தத்தில்
நீ தூவிய
பூ விதைகள்
முளைவிட்டிருக்கின்றன
நான் அறியாதது இது!

உன் பாதச் சுவடுகளை
மிகக் கவனமாய்
அழித்துவிடுகிறேன்
ஒவ்வொரு முறையும்

உன் திரும்புதல்கள்
என்னால்
மறுதலிக்கப் படுகின்றன!!

எழுதியவர் : கார்த்திகா AK (12-Dec-15, 3:50 pm)
பார்வை : 172

மேலே