தமிழாளும் தேசிய கீதம்
(புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய
' தமிழுக்கும் அமுதென்று பேர்..." என்ற பாடலின் சந்தங்களில்...)
தொகையறா
*******************
ஆயிரம் பிறவி எடுத்தாலும்
அசுர தவமாய் நின்றாலும்
ஐந்து பூதமும் வென்றாலும்
அரிதான வரமன்றோ தமிழ் ...வீரத்தமிழ்...
பல்லவி
***************
தாய்மைக்கும் தமிழென்று பேர் - நம்
தாய் ஊட்டும் அமுதெல்லாம் தமிழுக்கு நேர்...தமிழுக்கு நேர் ...
தாய்மைக்கு அன்பென்று பேர் - தமிழா
தாய் சொல்லே வேதம்தான் வாகைக்குத் தேர்...வாகைக்குத் தேர்...
சரணங்கள்
*****************
தாய்மைக்குக் கடலென்று பேர் -ஆழக்
கடல் பெற்ற பேரலைதான் தமிழுக்கு நீர்
தாய்மைக்கு உயிரென்று பேர் -மூத்த
தமிழின்றி மொழியேது தரணிக்கு ஏர்
தாய் வேங்கைத் தமிழர்க்கு வாள் -சிங்கத்
தாயான வார்த்தைகள் வாய்மைக்குத் தோள்
தாய் தமிழர் உரிமைக்கு வேல் -அன்புத்
தாயின்றி உலகத்தில் வேறேது மேல்
தாய் எங்கள் வாழ்வுக்கு யாழ் -எந்தத்
தீயவை வந்தாலும் ஓர்நாளில் பாழ்
தாய் எங்கள் நாட்டுக்கு வேர் -என்றும்
ஒருதாயின் பிள்ளைகள் உலகாளும் வா