சரக்கு

செக்கச் சிவப்பாய்
இருக்கு
சிக்கன அடிச்ச
பக்கன வரது
எச்சி

பல காசி குடுத்து
வாங்கி
நாசமாய் பேனதுதான்
மிச்சம்

உத்தி குடிக்கையில்
புத்தி கொஞ்சம்
உறைக்குதய்யா
இப்ப

மனசுக்குள்ள ஒழிஞ்ச
சில உணர்வுகள்
கக்கியது இதனால்
தான

மக்கிபோன நீர
நக்கீ குடிக்கையிலதான் தாங்கி
கொள்ள உறவு
உண்டு எண்ணி
நெனப்பு வருது


வீதியில நடக்கையில
சாதி கூட
பாக்குதய்யா இந்த
உலகம்

தள்ளாடி போகையில்
என் முன்னாடி
கோபமும் ஓடுதய்யா


எப்பதான் மாறுமையா
இந்த பொழப்பு
நான் கொஞ்சம்
நெனப்பா வாழ

மனசுக்குள்ள ஆயிரம்
கனவு
சரக்கு அடிக்கையில்
என் மனமும் மரணிக்குதய்யா
இப்ப


எக்குத்தப்பா பேச
நாசுக்கா போகுதையா
இந்த சரக்கு

நாதியற்று போகும்
உன்ன தூக்கி
போக
சந்தோசம வாழ
உறவுகளும் இருக்காது
மறுக்காத உன்
உயிரும் இருக்காது
இன்று
நீ அடிச்ச சரக்கால

மாறட்டும் ஓடாத
வாழ்க்கையும்
நீராத சரக்கும்
அப்பேதாவது சரக்கு
ஒளியட்டும்
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (14-Jun-16, 4:57 pm)
பார்வை : 309

மேலே