ஒரு குவளை பாலில் ஒரு துளி விஷம் என்றாலும் விஷமே

நாகரீகம்

ரவிக்கை போடா என் பாட்டி காலத்தில்
பாலியலோ
கற்பழிப்போ இல்லை


உடையை சரியாக உடுத்தும்
பெண்களும் உண்டு
சிறு துண்டை உடையாக அணியும் பெண்களும் உண்டு

கேட்டால் ஆளுக்கு
ஒரு காரணம் சொல்வார்கள்

உடை என்பது மானத்தை காக்கத்தான்
என்பதை உணரவேண்டும்

பாட்டி எல்லாம் இரவிக்கையோடு சுத்தினார்களே என்று கேட்டால்
அந்த காலத்தில்
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பார்வை நன்றாக இருந்தது.
இன்றும் அப்படித் தான் இருக்கிறதா...


அதுமட்டுமில்லாமல்
பாட்டி ஒற்றை சேலையில்
உடலை முழுவதுமாய் மறைத்திடுவார்
நாமோ அப்படி இல்லையே

உடையணியாமல்
ஒழுக்கத்தோடு வாழும்
காட்டுவாசிகளா நாம்

நாக்கை தொங்கபோட்டு
ஜொல் விடும்
நகரவாசிகள் இல்லையா நாம்


வக்கிரபார்வை நெஞ்சம் கொண்டவன்
நாட்டில் எங்கும் உலவி கொண்டிருக்கிறான்

நாம் தான் நமை
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்


ஆதலால் உடைகளை கவனமாக அணியுங்கள்



இங்கே நாங்கள் உடையை சரியாக போட்டுவிட்டாள் மட்டும் எல்லாம் மாறிவிடுமா

நிச்சயம் இல்லை

நாம் நம் கடமையை
சரியாக செய்கின்றோம் அவ்வளவே

இந்த நூற்றாண்டில்
இப்படியா
நீ பாரதி கண்ட புதுமை பெண் தானா
என்று வினவுகிறீர்களா...

ஆம்
நான் பாரதி கண்ட புதுமை பெண் தான்

வாழ்க்கை கல்வியை படித்தேன்
என் வாழ்க்கையை நானே வாழ்கிறேன்
நானும் இந்த நூற்றாண்டின் பெண் தான்

நம் உடை என்பது வெறும் அழகல்ல
அது நம் அடையாளம்

பாரதி சொன்னது போல்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

நாம் இதை வெறும் பாடமாக்காமல்
பாதையாக்க வேண்டுமென்றால்

நம் தமிழின் அடையாளத்தை
உயிரில் சுமப்போம்

உடைகளே இல்லாமல்
நாகரீகத்துடன்
வாழ்ந்த
முன்னோர்கள்

நாகரீகவாதிகளா

உடைகளுக்குள்ளே
உடலை தேடும்

நாம் நாகரிகவாதியா


அக்கடானு நாங்க
உடை போட்டாலும்
ஒரு பெண்ணை
நீ எப்படி பார்க்கவேண்டுமென்ற
சுய ஒழுக்கம் கூட உனக்கு கிடையாதா...

உன் பார்வையிலேயே
வன்மம் பொங்குகிறது
நூற்றில் தொன்னூறு
சதவிகிதம் பெண்கள் சரியாகத் தான் உடை அணிகிறார்கள்
உன் பார்வையிலேயே
கோளாறை வைத்துக்கொண்டு
பெண்ணை நாசம் செய்கிறாய்.

இதற்கு நாலஞ்சு பஞ்சாயத்து நடக்கும்
பொத்தம் பொதுவாக
சொல்லிவிடுவார்கள்
பெண் சரியில்லை என்று.
அவள் உடை சரியில்லை என்று.

எனக்கு ஒரு கேள்வி
பெண்ணை வளர்ப்பவளும் ஒரு பெண் தான் அவள் சொல்லித்தர மாட்டாளா
எப்படி வாழ வேண்டுமென்று

வீட்டில் அப்பா தாத்தா அண்ணன் தம்பி
என்று வளர்கிறவளுக்கு
உடை எப்படி அணிய வேண்டுமென்று தெரியாதா...

ஏன் உங்கள் வீடுகளில்
பெண் பிள்ளை இல்லையா...

உங்கள் வீட்டு பிள்ளை மாதிரியே தான்
எல்லார் வீட்டு பிள்ளையும்

பாலியல் பலாத்காரம்
செய்கிறான்
அவனுக்கு தண்டனை வருகிறது தூக்கு என்று
உடனே வரிந்து கட்டி வருகிறது
மனித உரிமை ஆணையம்

ஐயோ பாவம்
எப்படி நீங்கள்
ஒரு மனிதனை தூக்கில் போடலாம்

யோசிக்கமாட்டீர்களா
அவன் என்ன மனிதனா
மிருகம்

உங்கள் வீட்டு பிள்ளைக்கு
இப்படி நேர்ந்தால்
உங்கள் மனம்
அப்பொழுதும் இப்படி தான் சொல்லுமா...

ஒரு பெண் குழந்தையை
இந்த அளவிற்கு கொடுமை செய்த நரனை துண்டு துண்டாக
வெட்டினாலும் தகும்

# பெண்ணே சுதந்திரமாய் இரு
வீரமாய் இரு
பாதுகாப்பாய் இரு
தற்காத்துக்கொள்
தவறு என்றால் பொங்கி எழு


# பெண்ணை மதியுங்கள்


# இருபக்கமும் சேர்ந்தது தான் நாணயம்...

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் அல்ல இங்கு...
ஒவ்வொரு சோறுமே பதம் தான்.

ஒரு குவளை பாலில் ஒரு துளி விஷம் என்றாலும் விஷமே
ஆதலால்
எல்லோரும் சுய ஒழுக்கத்துடன் நடக்கும் வரை யாரும் இங்கே
பொய்யாக ஒருவரை ஒருவர் சாடிக்கொள்ளாமல்

வாழ்க்கையை பற்றி சிந்தித்து செயலாற்றுங்கள்....

ஒரு துளி விஷம் கூட இல்லா நாள்
பகல் கனவு தான்
ஆனால் கவிஞன் என்ற முறைக்கு
positive vibration மற்றும்
வருங்காலம் இப்படி அமைந்தால் நன்றாக இருக்குமென்ற என் கற்பனையுடன் (நாளை நிச்சயம் நடக்கும்(நாளை நடந்தாலும் நடக்கலாம்) முடிக்க விழைகிறேன்


தாய்பாலை போல் ஒரு குவளை பாலும்
பரிசுத்தமானதாக நிச்சயம் மாறும்
(மாற்றம் மட்டுமே மாறாதது .மற்றவை எல்லாம் மாறும்).

கவிஞனின் வருங்கால கற்பனை என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு
வந்துவிட்டார்.
என் ஆசான் பாரதி.

அவர் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே எழுதி விட்டு இறந்துவிட்டார்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்றே

இதுமட்டுமில்லாமல் இது போல் நிறைய உள்ளது.
அவரிடம் மிகவும் பிடித்தது
அவரின் தன்னம்பிக்கை

சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்( செய்யுள் வடிவில் இருக்காது.
என் மனதில் உள்ளதை அப்படியே பதிந்தேன்.மன்னித்துக்கொள்ளுங்கள்..
புதுக்கவிஞன் என் பாரதி எதுவும் சொல்லமாட்டார்.)

காலனையே சிறு புல்லென நினைக்கிறேன் என்று சொன்னவர்
எம் பாரதி
நம் பாரதி

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Jun-16, 2:40 pm)
பார்வை : 162

மேலே