ஏன் எனக்கு மட்டும், பராபட்சம்

தனிமையில் எனை
புலம்ப வைக்கிறான்,
இரவுகள் தலையணை
நனைக்க வைக்கிறான்,
இருதயம் ஒரு நொடி
உறைய வைக்கிறான்,
இருந்தாலும் சிறகின்றி
பறக்க வைக்கிறான்!

உன் வார்த்தை தரும் இதம்
வரிகளில் வடித்திட
முடியாத பேரின்பம்!
ஆயிரம் பேர் சூழ இருந்தும்,
உணர்கிறேன் தனிமையதை,..
நீயொருவன் கூட இருக்க,
அடைகிறேன் - ஆயிரம்
யானை பலம்!

கடிகார முள்ளே,
சபிக்கிறேன் உன்னை நான் ...
அவன் அருகிருக்கும் நிமிடங்களை
அசுர வேகத்திலும்,
அவன் இல்லாத நிமிடங்களை
ஆமை வேகத்திலும் கடந்து,
ஏன் எனக்கு மட்டும்,
பராபட்சம் காட்டுகிறாய்

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (4-Oct-15, 9:37 pm)
பார்வை : 518

மேலே