நினைவுகள்
நினைவுகள்!
காலம் சில நினைவுகளை
சுமந்து கொண்டு
வேகமாக ஓடுகிறது
அடுத்த மாதம்
மீண்டுமொரு தைப்பொங்கல்
என் நினைவுகளில்
ஏனோ யுத்தகாலம்
ஆம் பால் பொங்குகிறது
அரிசி போட வேண்டும்
பொம்மர் வருமோ?
எனக்குள் ஒரு பயம்
அவளைக் கேட்கிறேன்
“பொம்மர் வந்தால் என்ன செய்வீர்?”
“பதுங்குகுழி இருக்குத்தானே
பாய்ந்திடுவேன் நான் அதற்குள்”
அவள் வார்த்தைகள்
இன்றும் என் காதில்
காலத்தால் நினைவுகள் அழிவதில்லை.
பொன் அருள் – 20/12/2015.