கன்னத்தில் ஈவது
கன்னத்தில் ஈவது
உச்சி மோந்து அன்னை
வாரியணைத்து வழங்குவது!
அரைகுறை மனதோடு…
ஆசைக் காதலி அளிப்பது!
கள்ளமிலா குழந்தைகள்
கன்னத்தில் ஈவது
கடனாக கொடுத்தாலும்….
கச்சிதமாய் திரும்புவது!
கட்டில் அரங்கிற்கான
அச்சடிக்கா கடவு சீட்டு
இருவரின் இசைவோடு
ஏகாந்தத்தில் ஏகுவது!
ரதிமன்மதனின்
நில்லாமல் ஓடுகின்ற
இரதம்!
உணர்ச்சி வேகத்தின்
வேகத்தடை!
சொல்லும் போதே…
இனிக்கும்…..
முத்தம்….. முத்தமே!
--- கே. அசோகன்.