வாழ்க வளமுடன்

இணையில்லா ஈழமதில்
இன்புற்று அமைதியுடன்
இயல்பாய் வாழ்ந்த மக்கள்
இன்று எங்கெங்கோ/

பகட்டான பக்குவத்தில்
பற்றின்றி பணம் கண்டு
பச்சிளம் பிள்ளைகளும்
பெற்றவரும் உற்றவரும்

இன்றென்ன நாளையென்ன
இயன்றவரை முன்னேறி
இந்த நிலை மாறிடுமோ
இல்லை இது தான் என்றிணைந்து

பண்புடனும் பக்தியுடனும்
பவ்வியமாய் பாசத்துடன்
பத்திலொரு பங்கினராய்
பரந்து வாழ்கின்றனர் பாரினிலே

வாழ்க வளமுடன் ..

எழுதியவர் : பாத்திமா மலர் (26-May-25, 12:41 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vazhga valamudan
பார்வை : 20

மேலே