இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை

மின்னல் போல் மகிழ்வுகள் வரும்
மழை போல் சோகங்கள் கொட்டும்

மின்னலைக் காண விழிகள் மூடும்
மகிழ்வுகள் வர தன்னிலை மறக்கும்

மின்னலும் நீடிப்பதில்லை
மகிழ்வுகளும் நீடிப்பதில்லை

மின்னல் வரும் முன்னே
இடி வரும் பின்னே

மகிழ்வுகள் வரும் முன்னே
சோகங்கள் தொடரும் பின்னே

மகிழ்வு வர துள்ளுகிறோம்
துயரம் வர துவளுகிறோம்

ஒடித் திரிகிறோம்
ஓய்ந்து விடுகிறோம்

பிறப்பும் இறப்பும் உண்டு
இன்பமும் துன்பமும் வாழ்வில் உண்டு

இனபதிலேயே இருந்தவரும் கிடையாது
துன்பத்திலேயே துவண்டவரும் கிடையாது

அவரைப் போல் நாம் இல்லையே என்று நினைப்பார்
இவரும் அவரும் அப்படியே நினைத்து ஏங்குவர்

இறையோடு ஒன்றியவர்க்கு
இன்பமும் துன்பமும் சமநிலை

எழுதியவர் : முகம்மது அலி (21-Dec-15, 11:16 pm)
பார்வை : 43

மேலே