எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர் தைப்பொங்கல்!தை பிறக்கும் வேளையில் நன்றி சொல்ல ஒரு...

தமிழர் தைப்பொங்கல்!தை பிறக்கும் வேளையில் நன்றி சொல்ல ஒரு நல்ல விழாசூரியனே உனக்கு நன்றி!  நீயில்லாவிட்டால்ஒரு நெற்பயிர் கூட முளைக்காது ஏன் எதுவுமே நடக்காதுஎருதுகளே வயல் உழுதீர்கள் வண்டில் இழுத்தீர்கள் உங்களுக்கும் நாம் நன்றி சொல்லுகிறோம் முதல் நாள் முற்றத்திலே ஆதவனே உனக்குப்பொங்கிப் படைக்கிறோம் ஏற்றுக்கொள் இது தமிழர் நாம் உனக்குச் செய்யும் நன்றிக் கடன்எருதுகளே அடுத்த நாள் நாம் உங்களைநீராட்டி மாலையிட்டுப் பொட்டு வைத்துப் பழங்கள் ஊட்டி நல்ல தீனி தந்து வணங்குகிறோம்ஏற்றுக் கொள்ளுங்கள் எம் நன்றிக் கடனைவயல்களில் இறங்கி நீங்கள்  உழுதீர்கள்எரு வைக்கோல் என ஏற்றி ஏற்றி இழுத்தீர்கள்எம் வயிற்றின் பசி தீர்த்தீர்கள் மறப்போமா நாம்இவ்வுலகில் தமிழர்கள் மட்டுமே செய்யும் நன்றிப் பெரு விழா இது ஏற்றுக்கொள்ளுங்கள்பொம்மர்கள் எம் வானில் வட்டமிட்ட காலத்தில் கூட நாம் முற்றத்தில் தானே பொங்கினோம்போர் சற்று ஓய்ந்தாலும் அவலம் ஏனோ தொடர்கிறதுஎங்கள் முற்றங்களில் பால்ப்பொங்கல் என்றாலும்பலர் முகங்களிலோ இன்றும் கண்ணீர்ப் பொங்கல்வகை தொகையின்றி இல்லாமல் போன உயிர்கள் நம்மைவிட்டு இல்லாமலே போய்விட்டனபறிக்கப்பட்ட உரிமைகள் காணிகள் உடைமைகள்கைதிகள் விடுதலை மீள்குடியேற்றம் என நீளமான பட்டியல் தொடர்கதை போலஊரொடு ஒத்தது இதை யாரொடு நோவோம்உண்மை கண்டறிதலாம் பொறுப்புக்கூறலாம் நல்லிணக்கமாம் பொறிமுறையாம் சிறப்பு நீதிமன்றமாம்கற்றுக்கொண்ட பாடங்களாம் என எத்தனை கதைகள்தீர்வு வரும்வருமென நம்பிநம்பிக் கெட்டவர்கள் நாங்கள்இருந்தாலும் இம்முறை நம்பிக்கை ஏனோ வலுக்கிறது ஒரு பானையில் பொங்கவேண்டிய எம் தலைவர்கள் ஏனோ இம்முறை இரு பானைகளில் பொங்குகிறார்கள்ஏன் இந்தப் பேரவலம்?  மக்களே இவர்கள் நோக்கம் புரிகிறதா?இவர்கள் இரண்டு பட்டால் கொண்டாட்டம் யாருக்கு?தெற்கில் ஒரு சாரார் தங்கள் உடலில் காட்டு ராஜாவின் இரத்தம் ஓடுகிறதாம் இது இம் மனிதர்களின்உச்சக்கட்ட இனவாதம் இந்த நிலவரத்தால்கலவரம் வருமென மக்களிடையே பெரும்கலக்கம்கண்ணீர் பொங்குமோ? இனி இன்பம் பொங்குமோ?நாட்டின் தலைவர் நம்மூரில் பொங்க வருகிறாராம்நல்ல செய்தி தான் நல்லதையே நினைப்போம்நல்லதே நடக்குமென நம்பிக்கை  கொள்வோம்.என் மனத்தின்  உணர்வுகளை வார்த்தைகளாகக் கோர்த்து நான் படைத்த வார்த்தைப் பொங்கல் இது.  என் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!பொன் அருள் – 14/01/2016.   

பதிவு : பொன் அருள்
நாள் : 14-Jan-16, 8:32 pm

மேலே