காதல் பைத்தியம் -2

உண்ண
உணவு இன்றி
ஒரு வேலை
கை ஏந்தி.......

உடுத்த
உடை இன்றி
கந்தல் துணி
நான் ஆகி........

இருக்க
இடம் இன்றி
விலகி நிற்க்கும்
விலங்காகி.......

வாழும்
என்னைக் கண்டு
பைத்தியம் எனக் கூறும்
எந்த பைத்தியம் அறியும் !.......

என்னை
நான் முழுமையாக
இழந்து உன்னோடு
வாழ்கிறேன் என்று !!......

-தஞ்சை குணா

எழுதியவர் : மு.குணசேகரன் (3-Nov-15, 12:54 pm)
பார்வை : 535

மேலே