காதலியின் பிரிவு

---------------குத்து பாடல் போன்ற ஒரு முயற்சி----------------

கத்திரிப்பூ கண்ண காட்டி கவுத்துப்புட்டாளே
கத்திரிகோல் போல இப்போ வெட்டிப்புட்டாளே

கண்ணும் கண்ணும் பார்க்கும் போது சிரிச்சுக்கிட்டாளே
கண்ணடிச்சு கூப்பிட்டா மொறச்சு கிட்டாளே

சுத்தி முத்தி பாக்கையிலே அவள காணோம்
என் நெஞ்சுக்குள்ள பாக்கையிலே என்னைய காணோம்

மூச்சு முட்ட ஓடி வந்தேன் அவள பாக்க
அவ பேசாமே போய்ட்டா அவ மாமன பாக்க

கண்ணுக்குள்ள நிக்குதம்மா அவ அழகு
என் கண்ணு தண்ணி வத்துதம்மா அவள நெனச்சு

பொட்டி கடை போகும்போது ஒளிஞ்சு பாத்தவ
தண்ணி பம்புக்குத்தா போகும்போது நைசா சிரிச்சவ

கோவிலுக்கு போகும்போது கண்ணு அடிச்சவ
இப்போ பைத்தியமா சுத்தவிட்டு அவளும் போய்ட்டா

நெனச்சு நெனச்சு தவிக்கிறேன் அவள பாக்க
முழிச்சு முழிச்சு பாக்குறேன் தூக்கமில்லாமே

முடியல முடியல உன்ன மறக்க முடியல
விடியல விடியல என் இரவு விடியல
சூரியனா நீ வந்தா தாமரையா நா வரேன்
சந்திரனா நீ வந்தா அல்லிப் பூவா நா வரேன்

எழுதியவர் : மோகன் ராஜா - மோ ரா (3-Nov-15, 7:29 pm)
சேர்த்தது : மோகன் ராஜா
Tanglish : kaathaliyin pirivu
பார்வை : 451

மேலே