பிரதீப் ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரதீப் ஸ்ரீ |
இடம் | : கனடா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 26 |
மை கொண்டு வெள்ளை காகிதத்தில் கிறுக்கும் ஓவியமே கவிதை!
அது ஒரு கலை, அந்தக் கலைக்கு நான் ஒரு அடிமை!
கண்ணோரம் நதி பாய்ந்து
கடலோடு கலந்தோட
கரையோரம் நெடும்நேரம்
நிலவோடும் அலையோடும்
உனக்காக காத்திருந்தேன்...!
பிரதீப்
கண்ணோரம் நதி பாய்ந்து
கடலோடு கலந்தோட
கரையோரம் நெடும்நேரம்
நிலவோடும் அலையோடும்
உனக்காக காத்திருந்தேன்...!
பிரதீப்
இருளில் தான் நிலவு பிறந்தது
வலியில் தான் காதலும் வளர்ந்தது
இருளின்றி நிலவில்லை
நிலவின்றி இருள்களும் அகல்வதில்லை
வலி இன்றி காதல் இல்லை
காதல் இன்றி வலிகளும் மறைவதில்லை
கொண்ட காதல் என்னை கொல்ல
நித்தமும் நினைத்து
நித்திரை இழந்து மனம் வாடும்
வாடும் மனம் இருளை நாடும்
தனிமையில் இருந்து அவள் உறவை தேடும்
தேடல்கள் நீளும்
முடிவின்றி ஓடும்
அவள் கை பிடிக்கும் வரை!
பிரதீப் ஸ்ரீ
இயற்கையை ரசித்த என் கண்கள்
இயற்கை வரைந்த ஓவியம் அவளையும் ரசித்தது!
இதயத்தையும் துணைக்கு அழைத்தது!
பாவம் இதயம் காதலில் விழுந்தது!
அவளை நினைத்து நினைத்து துடித்தது!
இதயம்! ரத்தமும் வடித்தது!
அதன் வேதனையை கண்டு கண்ணும் கலங்கியது!
நான் தான் துரோகி என்றது!
இமை கொண்டு சிறையில் தன்னை அடைத்துக் கொண்டது!
பிரதீப் ஸ்ரீ
இலங்கையில் பிறந்த
இளங்கவி
இலங்கையில் பிறந்த
என் இளவல்
முகம்மது ஹனிபா
உன் அகம் அது ஹனி பா
முகம்மது சர்பான்
ஒருநாள் அவன்
முகம் அது காட்டி
திரையுலகில் நிற்பான்
கவிப்பூக்களை விற்பான்
நன்றியில் அவன் அசல் மான்
நட்புணர்வு அதிகம் கொண்ட முசல்மான்
ஓட்டமாவடி கண்ட
கவித்தொட்டம் அவன் பின்னே
வரும்காலம் கூடும் புவிக்கூட்டம்
அவன் பதினெட்டு வயது மாணவன்
ஆயினும்
அனைவரையும் வாழ்த்தும் கோ மான்அவன்
தமிழ்ப் பெண்ணைக்
காதலிக்கும் பருவத்தில்
தமிழ்தன்னைக் காதலிப்பவன்
என் இனிய இளவலே
காலம் உனக்கு கொடுக்கட்டும்
சிறப்பான களம்
அதற்காக உதவட்டும்
எழுதுத்தளம்
அவளைப் படைத்தவன் இறைவன் என்றால்
அவளைக் கவிதையாய் வடிப்பவன் நான்
படைப்பதால் கவிஞனும் கடவுள் தான்
கவிஞனுக்கும் கோவில் இல்லை - அந்தப்
பிரமனுக்கும் கோவில் இல்லை!
பிரதீப் ஸ்ரீ
நினைவு ஒரு அங்கம் என்றல்,
அந்த அங்கத்தில் குத்திய பச்சை அவள்!
அழிந்து போகாத சித்திரம்
மறைக்க முடியாத பொக்கிசம்
சலித்து விடாத சங்கீதம்
சாரலைத் தூவும் பொன் மேகம்
அவள் நினைவு பிரிக்க முடியாத ஒன்று,
பிரித்தால் பிரியாதோ என் உயிர் அன்று,
அவளை நினைத்துக் கொண்டு!
பிரதீப் ஸ்ரீ