இனிய இளவல் சர்பான்

இலங்கையில் பிறந்த
இளங்கவி
இலங்கையில் பிறந்த
என் இளவல்

முகம்மது ஹனிபா
உன் அகம் அது ஹனி பா

முகம்மது சர்பான்
ஒருநாள் அவன்
முகம் அது காட்டி
திரையுலகில் நிற்பான்
கவிப்பூக்களை விற்பான்

நன்றியில் அவன் அசல் மான்
நட்புணர்வு அதிகம் கொண்ட முசல்மான்

ஓட்டமாவடி கண்ட
கவித்தொட்டம் அவன் பின்னே
வரும்காலம் கூடும் புவிக்கூட்டம்

அவன் பதினெட்டு வயது மாணவன்
ஆயினும்
அனைவரையும் வாழ்த்தும் கோ மான்அவன்

தமிழ்ப் பெண்ணைக்
காதலிக்கும் பருவத்தில்
தமிழ்தன்னைக் காதலிப்பவன்

என் இனிய இளவலே
காலம் உனக்கு கொடுக்கட்டும்
சிறப்பான களம்
அதற்காக உதவட்டும்
எழுதுத்தளம்

எழுதியவர் : குமார் (28-Nov-15, 9:10 pm)
பார்வை : 222

மேலே