நட்பு

வாழை இலையொடித்து வாகாய்க் குடைபிடித்த
ஏழைப் பருவம் எமக்களித்தத் – தோழமை
கூழைக் குடித்தக் கொடுவறுமை வென்றுயர்ந்து
தாழைபோல் நிற்கும் தழைத்து.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Nov-15, 2:43 am)
பார்வை : 1172

மேலே