அண்ணாந்து பார்க்கின்றேன்
வானம் உரைக்கின்றது
வாழ்க்கை
வெண்மையானது தான்!
வாழ்பவர்கள் அதை
கருமையாக்குகின்றார்கள் என !!!
எதிலும்
ஒட்டிவிடாதே !
ஓட்டினால் இடி மின்னலுடன் மழை !
வானிலை அறிக்கையை
நீ தான் படிக்க வேண்டும் !!!!
இரவும் பகலும் வெயிலும் மழையும்
ஒரு சுழற்சி தான் !!!!
அது போல்
இனிய நிகழ்சிகளும்
இன்னல்களும் ஒரு சுழற்சி தான் !!!
கவலைகளை
மேகம்மூட்டம் போல்
சேர்க்காமல்
காற்றால்
கலைத்து விடுங்கள் !!!!
நல் எண்ணங்களை
பயிருடுங்கள்
நல் வாழ்க்கையை
அறுவடை செய்யுங்கள்
நலமான வாழ்க்கைக்கு !!!!
சோர்வடையாதீர்கள்
ஒரு போதும்
சோம்பேறித்தனம்
உங்களை மூலையில் வைத்து விடும்
என்னை போல் சுறுசுறுப்பாய் இருங்கள் !!!
பரந்த பார்வையோடு
வெண்மையான
எண்ணங்களோடு
உலகை
அனுகுங்கள் !!
எதிர்மறை எண்ணங்களை
சுட்டெரித்து விட்டு
நேர்மறை எண்ணங்களை
மழையாய் பொழியுங்கள் !!!!!
உலகம் உங்கள் கையில் !!!
உற்சாகத்துடன் புறப்படுங்கள் !!!!!!!!!