மழை மழை
கறும்பு சறுக்கில் ஒரு வீடு
மழை பொழிந்தால் பெரும்பாடு
நீர்வீழ்ச்சிகள் எல்லாம் கொட்டும் என் வீட்டில்
மழைதுளிகள் எல்லாம் நீந்தும் எங்கள் சொப்பில்
இடி இடிக்கும் மடி இடையில்
மின்னல் வெட்டும் கண் இமையில்
கொடி இடையில் கொட்டும் நீர்த்துளி
செடிகளை ஆட்டும் மழைத்துளி
காக்கைகள் கரைக்கும் மரக்கிளையில்
கிளைகளை முறிக்கும் புயல்காற்றில்
புகுந்து செல்லும் பறவைகள் வயல்காட்டில்
நிமிர்ந்து கத்தும் பசுக்கள் ஒருபக்கம்
குனிந்து ஓடும் மானிடர் மறுபக்கம்
வானங்கள் திறக்கும் மெல்ல மெல்ல
மேகங்கள் கரையும் செல்ல செல்ல
குளிர்ந்த தென்றல் வீசும் காதோரம்
குமிழிகள் கரையும் மண் இடுக்கில்
குழந்தைகள் விளையாடும் மண் சேற்றில்
எங்கோ சென்ற கதிரவன் மெல்ல திறக்க
பொய்கள் ஆக்கும் காட்சி பிம்பங்கள்...!!