அழியாச் சித்திரம்

நினைவு ஒரு அங்கம் என்றல்,
அந்த அங்கத்தில் குத்திய பச்சை அவள்!
அழிந்து போகாத சித்திரம்
மறைக்க முடியாத பொக்கிசம்
சலித்து விடாத சங்கீதம்
சாரலைத் தூவும் பொன் மேகம்
அவள் நினைவு பிரிக்க முடியாத ஒன்று,
பிரித்தால் பிரியாதோ என் உயிர் அன்று,
அவளை நினைத்துக் கொண்டு!
பிரதீப் ஸ்ரீ