அரும்புகள்
ஒன்றும் புரியவில்லை
எதோ நினைக்கிறேன்
எல்லாம் சூனியம்
ஏதேதோ குரல்கள்
சிலபொழுது நிசப்தம்
சிலபொழுது பேரிரைச்சல்
பயம் பயம்
புரியாத பயம்
எங்கிருக்கிறேன்
என்ன செய்கிறேன்
எங்கிருந்தேன்
என்ன செய்தேன்
புரியவும் இல்லை
பிரியமான அரவணைப்புகள்
யார் இருக்கிறார்கள்?
என்னைச்சுற்றி
பார்க்க ஆவல்
பரிதவிக்கும் இதயம்
சிலபொழுது சிரிப்பு
சிலபொழுது அழுகை
ஏன் இந்தத் துடிப்பு?
மலரத்தான் ஆசை
நாளாக வேண்டுமே?
காண்பேனோ புது உலகை?
காணாமலே மறைவேனோ?
எத்தனை சிந்தனைகள்?
இந்த பிஞ்சு அரும்பிற்குள்?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
