ஈரம்
தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன்
தண்ணீரில் தவித்தவனை அவன்
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்
மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்டவன் உதவி வியர்த்தமே
மீண்டவன் இன்று மாண்டான்-மனநோய்
மாட்டிக் கொண்டான் தூக்கு
அரண்டான் என் மகன் ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? தகாது தகாதே
அன்பாய் ஈரம் போக உலர்த்தினேனே !
அவனை காயப்போட்டதே நான்தானே !