காதல் ஒரு சுகமான வலி

காணும் போதே
காணாமல் போகும்
கானல் போல
ஆனதே
உன் காதல்...

உணர்வுகளில் ஊடுருவிய
என் காதலே ,
உதறிச்செல்லவா
உயிர் உருவில்
உலவி வந்தாய்....

வானம் மிஞ்சிய
கனவுகளோடு
கைகோர்த்து
கடந்து போன பாதைகளில்
நடந்து போகிறேன் ...
கண்ணீரோடு....

பிரிந்திடு
என்று
நீ சொல்லியிருந்தால் ,
பிரிந்திருப்பேன்!
உயிரே உன்னை...
என் உயிர் நீங்கி
இதழ் நீங்கா புன்னகையோடு
உனக்காக....

கனவுகள் இங்கே
கண்ட கண்கள் எங்கே ?
உணர்வுகள் இங்கே ,
உலவிய உயிரது எங்கே?

மெய்யாக நீ எனை
மறந்துபோனாய்..
இருந்தபோதிலும்
மெய்யோடு உயிராக
வாழும் உன் காதல்...
என் நிமிடங்கள்
காற்றோடு கரைந்து ,
காற்றாக கலைந்து
போகும் வரை....

எழுதியவர் : கவிதா (13-Oct-15, 6:15 pm)
பார்வை : 318

மேலே