என் நினைவு போன பின்னே

நீ கொடுத்த காதல்கடிதம்
நீயே கேட்டாய் கொடுத்துவிட்டேன்

நீ கொடுத்த உனது புகைப்படம்
நீயே கேட்டாய் கொடுத்துவிட்டேன்

நீ கொடுத்த எனது பிறந்தநாள் பரிசு
நீ கேட்டாய் கொடுத்தவிட்டேன்

நீ கொடுத்த காதல்
நீயே கேட்டாய் கொடுத்துவிட்டேனா இல்லையா எனக்கே தெரியாது

இப்போது உன் நினைவாக நினைவு மட்டும்தான் உள்ளது

அதை தருகிறேன் என் நினைவு போன பின்னே

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (13-Oct-15, 1:34 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 270

மேலே