என்னவள்

என்னவள்,
இந்த ஒரு வார்த்தையில் அடங்கி விட்டது,
"அவள் யாருக்கு உரிமை?"
என்ற கேள்விக்கு பதில்...............

ஆம்,
நல்ல நேரம் பார்த்து தான் மாலைசுடினேன்..
அவளாக இருந்தவளையும் என்னவள்லாக்கி கொண்டேன்!!!!!

முதல்லிரு வாரம்,
மருந்தும், விருந்துந்துமாக சென்றது
எங்கள் உறவினருடன்.........................

அடுத்த இரு மாதம்,
மகிழ்ச்சி என்னும் படகு கொண்டு
வாழ்கை கடலில் பயணித்தோம்...............

அடுத்த சில நாட்கள்,
கல்லடி பட்ட மரம் போல் கலங்கினோம்,,
சிறு சிறு மோதலினால்...............

பிறகு,
அடித்தது புயல் எங்கள் வாழ்வில்,
அறிதலும் புரிதலும் எங்களை வெறுத்து அகன்றதால்........

சிதைந்தது,
எங்கள் வாழ்கை,
கல் பட்ட கண்ணாடியாக......

மிஞ்சியது,
பிரிவு ஒன்று தான்............

வந்தேன்,
விட்டுகொடுத்து....................

கெட்டுபோவது,
எங்கள் வாழ்கை என்று.........

கேட்கின்றனர்,
பிரிவை சரி செய்ய வேண்டிய,
அவள் உறவினர்கள்,
"அவள் யாருக்கு உரிமை?"
என்று.......................

எழுதியவர் : பிரதீப் ரா (13-Oct-15, 10:44 am)
Tanglish : ennaval
பார்வை : 3488

மேலே