இயற்கையின் உண்மை

பருவம் அடைந்த நீர்க்கற்று
ஒரு உருவம் அடைந்தது
அது வானதிடல் நின்று
வழுக்கி வீழ்ந்தது

காற்றினில் அடிபட்டு
கார்மேகம் உடைபட்டு
உடல் சிதறி உயிர் உருகி
கண்ணாடி கற்றைகளாய்
தரை வந்து சேர்ந்தது

புவி தன் ஆயிரம் கை கொண்டு
பல கோடி விரல் கொண்டு
பிரிந்த மகன் இணைந்தது போல்
பிரியமுடன் கட்டிக்கொண்டது

சிந்தி விழுந்த சில்லறை
துளிகளை ஒன்றாக்கி
நிறம் குணம் மணம் மாற்றி
தன்னுயிர் தந்தது

உயிர் பெற்ற மழைநீர்
ஓடியது வெள்ளமாய்
தனக்கென்று பாதை கொண்டு

தனித்தனியாய் வாழ்ந்தால்
தடயம் இன்றி போவோம்
ஒன்றாய் இணைந்து
ஓர் பாதை அமைப்போம்
வாழ்க்கை வெள்ளமாக

எழுதியவர் : இணுவை லெனின் (20-Nov-14, 6:18 pm)
பார்வை : 266

மேலே