நிறமற்றவன் பேசுகிறேன்- குமார் பாலகிருஷ்ணன்

இருள் பிரதிநிதிகள் புடைசூழ
இந்திய பிராந்தியத்தின் கனவுதேவன்
என் கனவொன்றில் ஊடுருவுவதை ஊர்சிதப்படுத்திக் கொண்டவனாய்
உள்நுழைந்த கனவுதேவனை வழிமறித்து வாய்மொழிந்த கணத்தில்
அவன் ரதத்தின் பின்புறத்திலிருந்து உதிர்ந்த அட்டையொன்றை
நிச்சலத்தின் துணை கொண்டு திறக்கிறேன்!

அது பார்வையற்றவர்களின் கனவில் பயணிப்பதற்கான
நுழைவுச் சீட்டு!

காற்று மரங்களின் வேர்களைக் கிழித்துப் பறந்தபடி
அவர்களின் கனவுகளை நனைத்துக் கொண்டிருந்த போது
என் கனவுகளை தீச்சுவாலை தின்றுவிடுகிறது
அது எரிந்து முடிப்பதற்க்குள்

ஒரு ஃபைவ் ஸ்டார் அம்பை பிரயோகித்து
அந்தக் கனவுப் பிரவாகத்தில்
ஒரு நண்பனைச் சம்பாதித்துக் கொள்கிறேன்!

அரை மணிநேரம் ஒன்றாக சுற்றிய பின்
அவன் சூரியனினன் நிறம் புறாவின் நிறம் பசுமையின் நிறம்
புரட்சியின் நிறம் தூய்மையின் நிறமென அதே கரிய
நிறத்தைக் காட்டுகிறான்!

அனுமதிக்கான காலம் நிறைவுற
முதுகில் மீண்டும் இறக்கை பூட்டியவனாய்
முழுவதும் எரிவதற்க்குள் தீயை அனைக்க
பறக்க எத்தனித்த போதுதான் பொறி தட்டுகிறது

‘’நிறங்களெல்லாம் சாமானியருக்குத்தான்’’

எழுதியவர் : குமார் (28-Apr-14, 2:22 pm)
பார்வை : 113

மேலே