+ஒவ்வொரு மூச்சுக் காற்றும் உன் பேரை சொல்லிச் செல்லும்+
இமைக்கின்ற கணமெல்லாம்
உனைமட்டும் நினைத்திருப்பேன்
இமைமூடும் நேரத்திலும்
உனைஎன்னில் கண்டிருப்பேன்
ஒவ்வொரு மூச்சுக்காற்றும்
உன்பேரை சொல்லிச்செல்லும்
நீயில்லா இதயத்துடிப்பு
பெருந்தீயாய் எனைக்கொல்லும்
உனக்கெனவே பிறப்பெடுத்தேன்
உனைக்காக்க பொறுப்பெடுத்தேன்
கணக்கின்றி காதல்தந்து
மனம்மகிழ பார்த்துக்கொள்வேன்
எனக்கான உரிமைதந்து
என்னிதயம் கலந்துவிடு
உனக்கான அன்புதந்து
உன்னிதயம் கலந்திடுவேன்