யாதுமகிய அன்பே- குமார் பாலகிருஷ்ணன்

அன்பு
எல்லைகளற்று எங்கெங்கும் கொட்டிக்கிடக்கிறது!

முன்பு தொலைபேசி அழைப்புகளிலும்
பின்பு முகநூல்
உணர்வுகளிலும்
அன்பை கச்சிதமாய் காட்டிவிட எத்தனிக்கிறவர்கள் நிச்சயமாய் அறிகிலார்
அன்பு அதையும் கடந்ததென்று!

உங்களை நிராகரித்த அவளோ அவனோ கட்செவி அஞ்சலில்
உங்கள் கடைசிப்பார்வையையும் நிலைத்தகவலையும்
கவணிக்கும் அச்சில விநாடிகளுக்குள் உங்கள் இருவருக்கும் கூட தெரியாமலே
ஒரு அன்பு பிரவாகமெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது!

உங்களுக்கு துளியேனும் பிடிக்காத ஒருவரைப் பார்த்து நீங்கள் முகம் சுளிக்கும் போது
உங்களை கடந்து அவரை தீண்டும் அந்த மென்காற்றில் அன்பும் கலந்திருக்கிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும்!

ஒரு கசாப்புகடையில்
ஆட்டின் கழுத்தை தீண்டும்
அந்த அரிவாளுக்கும் ஆட்டிற்குமிடையில்
அபத்தமாய் அனுபொன்று உலாவுவதை நீங்கள் கொஞ்சம் உற்று கவணித்தால் புரிந்துகொள்ள முடியும்!

தலைக்கவசம் இல்லாமல் துள்ளுந்தில் வேகமெடுக்கும் அவரை நோக்கி நீங்கள் உதிர்க்கும் அந்த மட்டமான கெட்ட வார்த்தையிலும் கெட்டியாக ஒரு அன்பு ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்!

இப்படி இவ்வுலகில் எல்லாமே அன்புதான்
என்ன அவற்றில் சில நேர்மறை
சில எதிர்மறை அவ்வளவுதான்!

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (9-Nov-16, 10:16 pm)
பார்வை : 59

மேலே