பல விகற்ப இன்னிசை வெண்பா கால்நடை யாய்ஓர்நாள் ஊரெல்லை தாண்டியே

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

கால்நடை யாய்ஓர்நாள் ஊரெல்லை தாண்டியே
ஓரிடத்தில் ஓய்வெடுக்கும் வேளையில் ஐயகோ
ஓர்மனிதன் ஆநிரைபோல் புற்களை மேய்ந்திருக்கப்
பார்த்துநெஞ் சம்பதற வே

அருகில் அழைத்தவனி டம்ஏன்புல் தின்கின்றாய்
என்றே வினவ பசிக்குணவு இல்லையால்
புற்களை தின்கிறேன் என்றுரைத்த போதிலே
கண்களில் நீர்வழிந்த தே

வயிறார உண்ணவே வந்துவிடு என்னுடன்
வாழ்ந்திடுவாய் நிம்மதியில் என்றதும் இன்னும்
இரண்டுபேர் உள்ளரே என்செய்வேன் நண்பரே
என்றுரைத் துப்பார்க்க வே

பசிக்குணவு ரொம்பவே உள்ளதே என்னிடம்
அச்சமின்றி நண்பனே வந்திடு என்னுடன்
மூவரும் உண்ணலாம் நாளுமே என்றதால்
சென்றனர்மூ வர்பின்னி லே

பெரியதோர் வீடருகில் சென்றதும் மூவரின்
நெஞ்சிலே ஆனந்தம் பொங்கவே பின்புறத்தில்
உள்ளத்தோர் ஆளுயர புல்வெளியைக் காட்டியே
மூவருண்ண லாம்மென்ற னன்

09-11-2016

எழுதியவர் : (10-Nov-16, 10:57 am)
பார்வை : 42

மேலே