தூரத்து நணுபர்களுக்கு -குமார் பாலகிருஷ்ணன்

அவர்களுக்கு நான் இப்படியே இருப்பது பிடித்திருக்கிறது.
அதே சமயம் நான் எப்போதும் இதேபோல் இருக்கபோவதில்லை என்பதும் தெரிந்திருக்கிறது!

அவர்கள் உடலெங்கும் பதட்டம் விரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அவர்களின் நரம்புகளின் ஊடாக படபடப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் ஆசுவாசப்பட சிலவிநாடிகள்
அவகாசம் கொடுத்திருக்கிறேன். அது முடிந்தவுடன்
பெரும்வலியை மறைத்தபடி
சுற்றி யார் இருப்பினும்
என்ன ஆகினும்
துல்லியமாக ஐந்து மணிக்கு
என் அலைபேசியில் அழகுற சிரிக்கும் அந்த அலாரம் குழந்தையைப் போல
சிரிப்பது எப்படியென
கற்றுக்கொடுக்க இருக்கிறேன்.

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (18-Nov-16, 10:27 pm)
பார்வை : 77

மேலே