சில்லறை சத்தம்

ஒரு யாசகன்
கடும் வெயிலில்
மழையில்
சாக்கடை நாற்றத்தில்
பூக்கடைத் தெருவில்
சிக்னலில்
ட்ராபிக்கில்
தேநீர்க் கடையில்
வீடுகளில்
சந்தை வீதியில்
ஆலயங்களுக்கு வெளியில்
இன்னும் பல இடங்களில்
ஏளனங்களுக்கிடையிலும்
தூற்றுதல்களுக்கிடையிலும்
சேகரித்த சில்லறைகளில் சிலவற்றை
**அருள்மிகு டேஷ் சுவாமி** கோவிலின்
உண்டியலில் இட்டுவிட்டு நகர்கிறான்!
கொஞ்சநேரம் எதிரொலித்தபடியே இருக்கிறது
அந்த சில்லறை சத்தம்!!!'

எழுதியவர் : குமார் balakrishnan (2-Sep-16, 11:06 am)
Tanglish : sillarai sattham
பார்வை : 115

மேலே