விருதுகள்-2013 “நற்றமிழ் வளர்சேவை நன்மாமணி-2013,

“நற்றமிழ் வளர்சேவை நன்மாமணி.-2013.


குன்றுயர் மாமணிகள் பலர் இவ் அவனியில்
நன்று உன் சேவையென நாளும் வாழ்த்தும்
மன்றமென இத்தளம் வளர்ந்துயர் புகழ் பெற
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

கன்று என வந்தோற்கு களம் அமைத்து
நன்று வளர்த்து நானிலம் போற்ற
என்றும் புகழ் பல பெற்றிட அழகிய
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

கவனிக்கிறது உன் சேவையை நானிலம்..
அவனி முழுதும் நம் அழகுத் தமிழின்
பவனி .வந்திட வாழ்ந்திட வளர்ந்திட
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

சீறிப் பாயும் சீற்றத் தமிழ் -உயர் காதல்
ஊறி மேவும் வாலிபத் தமிழ் -மண்ணில் மானுட
அன்பு மேவும் தோழமைத் தமிழ் வளர
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

பித்தன், பரிசு வென்றான்,நடுநிலையாளன்
தத்தித் தவழ் வாசகன் என பன்முகம் அளித்து
தித்திக்கும் தமிழ் புவி திசையெங்கும் வளர
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

புவியெங்கும் உன் சேவை அறிமுகம் --தமிழில்
கவி பலர் உன்னால் இங்கு சரிசமம் --எனவே
அளிக்கின்றோம் ஒரு விருது 2014ஆம் ஆண்டின்
துளிர் விடும் முதல் விருதுனக்கே பெற்றிடுவாய் .


நமக்கெல்லாம் நமது கற்பனை குதிரை ஓட –தமிழ்
மணக்கும் களம் படைத்தளித்து நற்சேவையாற்றும்
ராஜேஷ்குமார் பெறுகிறார் இவ்விருது :
“நற்றமிழ் வளர்சேவை நன்மாமணி.-2013..”

வாருங்கள் வாழ்த்துவோம்...

“நற்றமிழ் வளர்சேவை நன்மாமணி.-2013., ராஜேஷ்குமார்------வாழ்க…வளர்க…!!!.”

எழுதியவர் : அகன் (14-Dec-13, 11:31 am)
பார்வை : 152

மேலே