விருதுகள்-2013 உணர்வோங்கு கருத்தாக்க செம்மல் -2013
தோழமைகளுக்கு வணக்கங்கள்...
பன்னாட்டுப் படைப்பாளிகளின் பைந்தமிழ் ஆக்கங்களாக -எழுத்துப் பலகாரங்களாக நாம் நாள்தோறும் பல இங்கு சுவைத்து வருகிறோம்.
சுவைக்கு கூடுதல் சுவை ஊட்டுபவை கருத்துக்கள்...
கருத்துக்களில் நகைச்சுவை ...நக்கீரப் பார்வை...நளின சுட்டல்...தோழமைத் தேற்றல்..என்று இருப்பின் நலமே
எவருக்கும்..அனுபவத்தின் வெளிப்பாடே சுட்டல் என்க...அனுபவம் என்பதன் மறு பெயர் முன்பே செய்த அல்லது அறிந்துள்ள தவறு எனக் கொள்க. தான் செய்த தவறு இனங்கண்டறியப்படின் அதனைச் சுட்டுவதில் தடை இருக்கக் கூடாது...இருப்பின் மொழிச்சிதைவே உண்டாகும் அல்லவா...??
தளத்தில் படைப்புகள் மீதான கருத்துக்கள் உரைப்பது என்பதையும் உணர்வு பூர்வமாக கருத்துரைப்பதும் என்பதையும் உற்று நோக்கி வருகிறேன்.உறவுகள் வளர்க்கும் , உன்னத அன்பு மேலிடும் கருத்துக்கள் இங்கு பதியப்படுவது கண்கூடு....
விரியும் எழுத்துக்களில் தோழமை ஊறும் அன்போடு படைப்பாளி வழிகளுக்கு வெளிச்ச விலாசம் தரும் உணர்வு பூர்வமான கருத்துக்கள் அளித்து வரும் மூவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "உணர்வோங்கு கருத்தாக்க செம்மல் -2013 " பெறுகின்றனர்...
***************************************************************************
தோழர்கள்
@@@@@@ எஸ் .எம் .ஆனந்த் @@@@@@@
@@@@@@ ஜெயாராஜரெத்தினம் @@@@@@
@@@@@@@ பானுகி @@@@@@@@@@@
ஆகியோர் "உணர்வோங்கு கருத்தாக்க செம்மல் -2013 " எனும் விருது பெறுகின்றனர்
********************* ****************************************************
வாழ்த்துவோம் அவர்களை...வாரீர்....