மேதகு தேசியத் தலைவன்
காலம் எமது எதிரியாகலாம்
கூடிவாழ்ந்தவன் காட்டிக்கொடுக்கலாம்
பல பேர் இங்கு துரோகியாகலாம்
சூழ்ச்சி பலவும் எதிரி செய்யலாம்
சுதந்திரம் பெற்று தமிழீழம் அமைப்போம்
தலைவன் இலட்சியத்தை மனதினில் கொண்டு
தமிழர்கள் இங்கு பலபேர் உண்டு
உலகம் யாவும் தடைகளாகலாம்
தடைகள் யாவும் பொடிகளாகலாம்
தரணியில் ஒருநாள் உயர்ந்து நிற்போம்
தனிநாடு பெற்று தமிழீழம் அமைப்போம்
வரலாறு எனது வழிகாட்டி என்றானே
கல்லணை கட்டிய கரிகாலனே
தமிழீழம் கட்டத்தான் பிறப்பெடுத்தானே
கடல்புறா புத்தகம் வாசித்தான்
கடல்புறா கப்பலை வடிவமைத்தான்
கடற்படை உருவாக்கினான்
கடற்புலிகளால் எதிரிகளை கலங்கடித்தான்
மகாபாரதம் புத்தகம் வாசித்தான்
போர்நெறிகள் யாவும் அறிந்தான்
ஒழுக்க சீலனாய் வளர்ந்தான்
ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்
புரவலர்களின் புகழ்பாட
புலவர்கள் இங்கு பிறப்பெடுக்கவில்லை
புலிகளின் வீரம் பாட
புரட்சிக் கவிஞர்களை பிறப்பெடுக்க வைத்தான்
”வென்று வாடா மகனே” என்று
சொல்லி அனுப்பினான்
எம்பாட்டன் அவன்
“வென்று வாடி மகளே”என்றும்
சொல்லி அனுப்பினான்
எம்தலைவன் அவன்
பிரபாகரன் அவன்