சாட்டையன்
சம்லேஷ் பண்ணையார் வீட்டுப் பையன்.
அந்த ஊரில் உள்ள ஆரம்பப் பள்ளியில்
படிக்கும் போதே வசதி படைத்தவன் என்ற
திமிரில் வகுப்பறையிலும் வெளியிலும்
தன்னுடன் படிக்கும் பிள்ளைகளிடம்
சேட்டை செய்வான்.
பண்ணையார் வீட்டுப் பையன்.
அவனை அடித்துத் திருத்த ஆசிரியர்களால்
முடியவில்லை.
பண்ணையாரிடம் அப்பள்ளியின்
தலைமை ஆசிரியர் சேட்டையன் சம்லேஷ்
பற்றி புகார் கொடுக்கப் போனவரிடம்.
பண்ணையார், "யோவ் வாத்தியாரே எம்
பையன் படிக்கிறது பதவிக்குப் போறதுக்கு
இல்லை. அவனுக்கு கூட்டல், கழித்தல்,
பெருக்கல், வகுத்தல் மட்டும் சொல்லிக்
கொடுங்க. அவன் அஞ்சாம் வகுப்புப்
படிக்கிறான். எங்க ஜமீன் பரம்பரைச்
திமிர் அவங்ககிட்ட இயற்கையாகவே
இருக்கிறதால் அவன் சேட்டை செய்வதைத்
தடுக்க முடியாது. உங்கள் பள்ளி
மாணவர்கள் அவனுக்கு 'சேட்டையன்'னு
பட்டப்பேரு வச்சிருக்கிறதா எனக்குத்
தகவல் கெடச்சது. இன்னும் மூணு மாசம்.
முழு ஆண்டுத் தேர்வு நடக்கும். மூணு
மாசம் கழிச்சு தேர்வு முடிவுகளை
அறிவிப்பீங்க.
எம் பையன் சம்லேஷ் தேறினாலும்
தவறினாலும் எனக்கோ அவனுக்கோ
அணுவளவும் கவலை இல்லை.
அதுக்கப்பறம் சம்லேஷ் பள்ளிக்கு
வரமாட்டான். அவனோட வேலை எங்க
மாந்தோப்புகளைக் கண்காணிப்பது தான்.
திருட்டு மாங்காய் பறிக்க வர்றவங்களை
வேலைக்காரங்க பிடிச்சுக் குடுப்பாங்க.
அவுங்களை சாட்டையாலே அடிச்சு
அனுப்புவது தான் சம்லேஷோட வேலை.
மாந்தோப்பு கணக்கு வழக்குகளையும்
பாத்துக்குவான். வாத்தியாரே எங்க
மாளிகைக்கு வந்தது வந்தீங்க. கொஞ்சம்
காப்பித் தண்ணி குடிச்சிட்டுப் போங்க"