சிதறிய வரிகள்
சிதறிய வரிகள்
தனிமை தீண்டும் இன்பம்
இன்பத்தில் வரும் மயக்கம்
மயக்கத்தில் உன் வாசம்
உன் வாசத்தில் என் நொடிகள் கரைய
மீண்டும் தனிமை துரத்தியதோ.
துரத்திய தனிமையில் வற்றும் என் தாகம்
தாகம் தீர்க்க நீ வர,
மயக்கத்திலே காத்து இருக்கிறேன்...
நீ எனை நெருங்கும் நொடிகளில்
அள்ளி அணைக்க ஏங்கும் என் கைகளில்
தடையேதும் இல்லாமல் வருவாயா...