கவிராஜப்பா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/zclwk_41218.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிராஜப்பா |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 14-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 347 |
புள்ளி | : 41 |
காப்பியமாய் நீ இருக்க
நாவலாய் உன்னை நான் படிக்க
சிறுகதையாய் உன் நினைவுகளை
ஹைக்கூ வாக்கி என் சிறு இதயத்தில் புதைத்து வைத்தேன் !
ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் நீ பெருங்காப்பியமாய்
என் நினைவில் வாசிக்கிறாய் தினம் ஒரு புதுக்கவிதையை !
பெண்மைக்கு ‘ மை ’ அழகு
பாசத்தில் என்றுமே உரிமை
மதிப்பாய் பேசினால் தண்மை
அன்பு கொண்டால் இருந்திடும் உண்மை
அரவணைப்பில் அறியலாம் உன் தாய்மை
போட்டி என்றால் தெரிந்திடும் உன் வலிமை
பல வெற்றிகளை கடந்திடும் உன் கடமை
புன்னகைத்து இன்னல் புதைத்து
போராடிடும் ஓர் புதுமை
பொறுமையாய் பல பெருமைகள்
நிறைந்தது உம் பெண்மை !
ஊடலும் கூடலும்----கயல்விழி
எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.
காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.
என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்
உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.
போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.
ஆனால்
தயவு செய்து
"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண
ஒருவரின் உண்மைத்தன்மையைச்
சோதிக்கத் தரப்படும்
ஓர் மறைமுக ஆய்வுகோல்
பார்ப்போரின் கண்களையும் கட்டி இழுக்கும் மின்சாரக்காதலி
தொலைக்கட்சிபெட்டி
தாய்-
அழாமல் பார்த்துக்கொள்ளும் நிரந்தரக் காதலி
காதலி-
அழுகையை பரிசளிக்கும் அன்புத்தாய்...
மானுடம் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம்..
சேரிடம் அறிந்து
சேராத
காகிதக்கடவுள்...
பிடித்தவர்களை ஆட்டிப்படைக்கும்
பொல்லாதப்பிசாசு....
தேடி அலைபவற்கு நீ கானல் நீரானாய்
கோடி சேர்த்தவற்கு பயமே நீயானாய்
கொடுத்துப்பார்ப்பவற்கு
உன்னாலே பெருமதிப்பு
அள்ளி சேர்த்தவர் அறிவாரோ
இல்லாதோர் பறிதவிப்பு
இனியும் உன்னை இங்கு கடவுளென
போற்ற மாட்டோம்
காரணம்
அவன் நம்பினோரை விட்டதில்லை...
- பணம்-
நீ ஒரு சமத்துவவாதி
மேடு பள்ளங்களை பார்க்கமாட்டாய்..
நீ ஒரு தைரியப்போராளி
தடுக்கும் தோல்விகளையும்
தாண்டி வருவாய்....
நீ ஒரு துடிப்பானவன்
உன் பயணத்தில் வேகத்திற்கு பஞ்சமில்லை...
நீ உண்மையான உழைப்பாளி
நேரம் காலம் பார்க்கமாட்டாய்...
நீ எளியவனின் பங்காளி
சிறு புல்லிற்கும் உன் பங்கிருக்கும்..
நீ ஒரு தன்னலம் பாரா தியாகி
உன்னை இடையிடையே எல்லோரும் அள்ளிடலாம்....
நீ ஒரு நிகரில்லா தலைவன்
உன் பின்னால் திரண்டு வரும் பெரும்படையால்..
நீ ஒரு பாசம் கொண்ட பொறியாளன்
பல்லுயிர் புசித்திருக்க புதுப்பாதைகள் அமைத்திடுவாய்..
தவித்திடும் மானிடற்கு
தன
மழை பெய்தது
நல்ல வேளை
கைப்பேசியை பத்திரமாக கையில் எடுத்து....
மனைவியிடம் சொன்னான் "குழந்தை பத்திரம் "...
எங்கள் இந்தியா இது எங்கள் இந்தியா
எளிய பல தலைவர் வாழ்ந்த இனிய இந்தியா
வீடு வாசல் மறந்து பல வீரர்கள் அன்று
நாடு காக்க செய்த தியாகம் சொல்லிடுவோம் இன்று
வெள்ளையனின் அடிமை கண்டு வீரு கொண்ட நாடு
மெல்ல மெல்ல முயற்சியாலே உரிமை வென்ற நாடு
இது வலிமை கொண்ட நாடு ( எங்கள்….)
தலைமுறைகள் வளர பல தலைவர்கள் வீழ்ந்து
கடைமைகளை உணர்ந்து நாம் உண்மை வழி வாழ்வோம்
புரட்சி கொண்டு வறட்சி வென்று வளர்ச்சி கண்ட நாடு
வறுமை நீங்கி பெருமை ஓங்கி உரிமை வென்ற நாடு
இது வலிமை கொண்ட நாடு ( எங்கள்…)
நண்பர்கள் (6)
![பாலா தமிழ் கடவுள்](https://eluthu.com/images/userthumbs/f4/icbnu_40174.jpg)
பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![சையது சேக்](https://eluthu.com/images/userthumbs/f4/howez_41353.jpg)
சையது சேக்
achanpudur
![நாகராஜன்](https://eluthu.com/images/userthumbs/f2/shxkw_27827.jpg)
நாகராஜன்
Nagercoil
![கலிகாலன்](https://eluthu.com/images/userthumbs/f4/rbeaw_41281.png)