சுதந்திர தினப்பாடல்
எங்கள் இந்தியா இது எங்கள் இந்தியா
எளிய பல தலைவர் வாழ்ந்த இனிய இந்தியா
வீடு வாசல் மறந்து பல வீரர்கள் அன்று
நாடு காக்க செய்த தியாகம் சொல்லிடுவோம் இன்று
வெள்ளையனின் அடிமை கண்டு வீரு கொண்ட நாடு
மெல்ல மெல்ல முயற்சியாலே உரிமை வென்ற நாடு
இது வலிமை கொண்ட நாடு ( எங்கள்….)
தலைமுறைகள் வளர பல தலைவர்கள் வீழ்ந்து
கடைமைகளை உணர்ந்து நாம் உண்மை வழி வாழ்வோம்
புரட்சி கொண்டு வறட்சி வென்று வளர்ச்சி கண்ட நாடு
வறுமை நீங்கி பெருமை ஓங்கி உரிமை வென்ற நாடு
இது வலிமை கொண்ட நாடு ( எங்கள்…)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
