நட்பும் -பக்தியும்

"நட்பும் -பக்தியும்" என்கிற படைப்பை எழுதக் காரணமாக இருந்த சம்பவம் :-

எனது "ஆண்டவனும் - நட்பும்" என்ற படைப்பை பற்றி என் எழுத்துலக நண்பர் மங்காத்தாவிடம் கருத்துக் கேட்டேன், அவர் சொன்னார் " உங்கள் எழுத்து நடையும் அது போகும் லாவகமும் அருமையாக இருந்தது. அதை பாராட்டி எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் ஆண்டவனை உங்கள் எழுத்தில் கொண்டு வந்ததினால் தொண்டைக்குள் முள் சிக்கியது போல் இருந்தது அதனால் பேசாமல் இருந்து விட்டேன் என்றார்.

உடனே அவரிடம் சொன்னேன், அப்படியா, அந்த ஆண்டவனிடமே கேட்கிறேன் இதற்கு என்ன விடை என்று.

ஆண்டவனை கேட்டேன் அதுதான் "நட்பும் - பக்தியும்"


நட்பும் - பக்தியும்

ஆண்டவனைப் பற்றி
அழகாக எழுதினேன்
ஆருயிர் நண்பனோ
அவதியில் நெளிந்தான்

காரணம் என்ன
என நானும் வினவினேன்

அருமையான நடையிலே
அழகாக எழுதுகிறாய்
ஆண்டவனை ஏன்
நடுவிலே இழுக்கின்றாய்

என நன்றாகவே கேட்டான்
எனதருமை நண்பனும்தான்

உன் கவிதையை மெச்சி
இருவரிகள் எழுத
மனம் இடம் தரவில்லை
தடுப்பது அந்த ஆண்டவனே

என தங்கத் தமிழில்
தன் மனதை திறந்தான்
பொதுவாக என் எழுத்தை
ஊக்குவிற்கும் நண்பனேதான்

ஆண்டவனுக்கும் அவனுக்கும்
அப்படி என்ன பகையோ

நட்பு பெரிதா, பக்தி பெரிதா
மௌனமாக கேள்வி வைத்தான்
அந்த நாத்திகவாதி
இந்த ஆத்திகவாதியிடம்

சாதுர்யமான கேள்வி
சமயோசிதமாக கேட்டு விட்டான்
சங்கடமே இல்லாமல்
சட்டென்று பதில் சொன்னேன்

உன்னைப் பார்க்கும் பொழுது
நட்பு பெரிது
"அவனைப்" பார்க்கும் பொழுது
பக்தி பெரிது

நட்பும், பக்தியும்
இரு கண்கள் போல் எனக்கு

இரண்டையும் சரிசமமாக பார்ப்பது
என் பழக்கம் என்றேன்

அப்படியானால்

நண்பனும் ஆண்டவனும்
ஒன்று என்கிறாயா

நச்சென்று கேட்டான்
நட்பின் உரிமையோடு

கேட்பது அவன் உரிமை
கேட்டுக் கொள்வது என் கடமை
இதில் சங்கடம் எதுவுமில்லை
இதுதான் நட்பின் வீரியம்

நட்பின் கேள்விக்கு
நட்பே பதில் சொல்லும்
நண்பர்கள் நாங்கள் அறிவோம்
நீங்களும் சற்றே பொறுப்பீர்

நட்பு இங்கே இருக்கு
பக்தியை அழைப்போம் என்றேன்

புருவம் சுருக்கி
ஏளனமாய் என்னைப் பார்த்தான்

உன் உருவம் எனக்கு தெரியும்
என் உருவம் உனக்கு தெரியும்
அவன் உருவம் எப்படி இருக்கும்
ஆவலை அதிகரிக்காதே

சடுதியில் வரச்சொல் அவனை
என் ஐயத்தைப் போக்கிக் கொள்வேன்

அவனும் வந்து விட்டான்
நானும் அறிந்து கொண்டேன்

கைகூப்பி வணங்கி நின்றேன்
புரியாமல் விழித்தது நட்பு

ஏதோ ஒரு ரூபத்தில் அவனை
எதிர்பார்த்து காத்திருந்த நட்பு

அங்கே யாரும் இல்லை என்பதால்
உடம்பெல்லாம் கேள்வியோடு
அர்த்தத்தோடு பார்த்தது நட்பு

நட்பின் அருகில் சென்று
நட்பாய் அணைத்துக்கொண்டு
நட்பின் காதில் சொன்னேன்
நம்பிக்கையின் பொருளை உரைத்தேன்

நட்புக்கும் கற்பு உண்டு
நட்பிலும் உரசல் உண்டு
நட்பிலே புரிதல் உண்டு
நன்றாக உணர்ந்து கொள்வீர்

நட்பே என் உயிர் மூச்சு என்றான்
நட்பே என் சகலமும் என்றான்

இருந்தும்...

இல்லாத ஒன்றை
நட்பு இருக்கிறது என்று சொன்னால்
என் மனம் ஏற்காது நண்பா

உன் மனம் நோகாமல் இருக்க
மௌனம் நான் காப்பேன் என்றான்

உன் பக்தியில் மூழ்கி நீயும்
உன் முன் நிற்பதாக சொல்லும்

"அவனிடம் " பேசிவிட்டு வா
அவசரம் ஒன்றும் இல்லை

நான் எங்கேயும் போகவுமில்லை
என மிகையின்றி சொன்னது நட்பு

நடந்தவை அனைத்தையும்
விஷமப் புன்னகையோடு

பார்த்த பரம்பொருளும்
என்னிடம் வந்து நின்றான்

ஏன் இந்த வேண்டாத அவஸ்தை
பக்திக்கும் நட்புக்கும் நடுவே
பாலமாக நீ இருக்கின்றாயா

இரண்டும் இரண்டு கண் என்றாய்

அதிலே ஒரு விஷேஷம் கவனித்தாயா

கண்கள் இரண்டும் ஒன்றையொன்று
பார்ப்பதில்லை

அவன் சொன்னதை கேட்டு
சிலிர்ப்போடு உற்றுப் பார்த்தேன்
அர்த்தத்தை புரிந்து கொண்டு
"அவனே" அதை கேட்டும் விட்டான்

உன் நட்பும் இதைத்தான் சொல்லியதோ

ஏதோ உட்பொருளை உணர்த்தியது உள்மனம்

பக்தியும் நட்பும் ஒன்றோ
ஏதோ புரிந்தும் புரியாமல் நின்றேன்

இதமாக என் தோளை தடவி
தன் பேச்சை தொடர்ந்தான் அவனும்

அவரவர் மனதிலே
ஆயிரம் எண்ணங்கள் உண்டு

சிந்திக்கும் திறனிலும்
பலவகை கணக்கு உண்டு

அது அவரவர்க்கு சொந்தமேயன்றி
மற்றவர் எவரும் அறியார்

அதுபோல் தான்
என் இருப்பும் இருக்கும்

என்னை நம்புபவருக்கு
நான் கடவுள் தான்
அதில் ஐயமில்லை

நம்பாதோருக்கு
நான் வெறும் கல் தான்
அதை நானும் அறிவேன்

கட்டாயப் படுத்தி
எதையும் சரிசெய்ய
தேவையில்லை

அவரவர் நம்பிக்கையை
முதலில் மதிக்க கற்றல்
வேண்டும்

ஆத்திகம் பேசும் எவரையும்
மற்றவர் கேலி செய்தால்

ஆத்திரம் அடைய வேண்டாம்
அமைதியை காக்க வேண்டும்

நாத்திகம் பேசும் யாரையும்
நக்கல் செய்ய வேண்டாம்

அவரவர் நம்பிக்கைக்கு
பரஸ்பரம் மரியாதை
தருதல் அவசியம்

அப்படி இருந்து பாரும்
அகிலத்தில் அமைதி
தானாய் நிலவும்

மாறாக....

என் இருப்பைப் பற்றி
விவாதம் செய்ய நினைத்தால்

அது உங்கள் மடமை
அதை சற்றே
அனைவரும் அறிந்திடுவீரே

இதில்....

எனக்கு புரியாத புதிர்
ஒன்று உண்டு

அது உங்கள் மடமை
என்பேன்

அவரவர் மதத்தை சாடி
என்னையும் அதிலே இணைத்து

உங்கள் காழ்ப்புணர்ச்சியை
காட்டும் நீங்கள்

அதன் மூலம் சாதிப்பது என்ன
அறிவுள்ளோர் சிந்தித்துப் பாரும்

என்னை மையமாக வைத்து
ஏன் இந்த விதண்டாவாதம்

காலகாலமாக தொடரும்
இதற்கு ஒரு முடிவு கட்டிடுவோம்

பிறந்த பிறப்பின் பலனை
முழுதாக நாமும் அடைய

இலட்சியம் கட்டாயம் தேவை

அதன் இலக்கு நானாக இருத்தல்
கட்டாயத் தேவை இல்லை

என்னை அப்படியே இருக்க
விடுங்கள்

அவரவர்க்கு ஆயிரம் வேலை
அதிலே கவனம் செலுத்தி

அர்த்தமுள்ள வாழ்வை வாழ
நீங்களும் பயிற்சி எடுங்கள்

என தன் பேச்சை முடித்தான்
அகிலத்தை படைத்த அவனும்

உன் பேச்சின் நியாயம் உணர்ந்தேன்

உன்னை இல்லவே இல்லை
என்று உரக்கக் கூறும் கூட்டம்

உன் பேச்சையா ஏற்கும்
அதை நீ யோசித்தாயா

யார் இதை சொல்வர் அவரிடம்
என வீர ஆவேசமாய் கேட்டேன்

சிரித்த படியே உரைத்தான்
சிந்தையில் அமர்ந்த அவனும்

நட்பே புனிதம் என்று போற்றும்
மானிடர் கூட்டத்திலே
நட்பின் மூலம் நீயும்
நட்பாய் சொல்லிப் பாரேன்

நட்பு நட்பை மதிக்கும்
ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கும்
எனக்கும் நட்புக் கரம் நீட்ட
உன் நட்பே என்னை அழைக்கும்

அதற்கு பெயர்

ஆத்திகமும் இல்லை
நாத்திகமும் இல்லை

அதுவே.....

நட்பின் உலகம்

எங்கும் எதிலும் நட்பு
அங்கு கலகலப்பிற்கு
பஞ்சம் இல்லை
மகிழ்ச்சியின் எல்லையும்
அதுதான்

என முடித்தான் "அவனும்"

போகும் முன்,

என் காதருகில் வந்து சொன்னான்

இதுவரை உன் பக்கத்தில்
பொறுமையாய்

காத்துக் கிடக்கும்
உன் நட்பிடம்

பகிர்ந்து பாரேன்
நட்பும் பக்தியும் சேரும்

பக்தியை தம்முள் வாங்கி
நட்பே உயர்ந்து நிற்கும்

என சொல்லி புறப்பட்டான்
அவனும்

நானும் லேசாய் திரும்ப
நண்பனும் அரத்த புஷ்டியாய்
புன்னகைத்தான்

வாழ்க நட்பு என்றும்

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 13.08.2017. நேரம் - இரவு 8.17 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (14-Aug-17, 6:00 pm)
பார்வை : 47

மேலே