இறைவன் தந்த எந்நாடு
எங்கநாட்டு சுதந்திர தினத்தை
கொண்டாடிடும் மக்களப்பாரு!
கம்பத்துளப் பறந்திடும்-தேசிய
கொடியப் பாரு!
எங்கநாட்டு தேசியகீதம்
மொத்தநாடும் சேர்ந்தேப்பாடும்!
நாட்டுப்பற்று உள்ள எங்க
மக்களுக்கு சந்தோசம்!!
நெஞ்சிக்குள்ள துடிக்கும் நொடியில்
கீதம் வந்து ஒலிவீசும்!!
சாதிமத வேற்றுமை இன்றி
ஒற்றுமை ஒன்றே எந்நேசம்!!
சொன்னாலும் போதாது எங்க
நாட்டில் உள்ள பெருமைய...
நாட்டுக்காக பலபேர் உயிரையும்
விட்டானே!!
வானத்திலே உள்ள சூரியனை
தொட்டானே!!
இருவுலகப் போருளஅதில் நடுவுல
அவன் நின்னானே
அடிக்காம ஜெயிக்கனும் இடம்பிடிக்கனும்
என்று சொன்னானே...
தேசியமரம் நம்நாட்டில்
ஆலமரம்!
தேசியநதி நம்"௧ங்கை" நதியத்தான்
சொன்னானே!
இந்த நாட்டிலுள்ள
மக்கள்
தினமும் சொல்லும்
"ஜன கண மன"என்னும்
நெஞ்சின் மொழி!!!
சொல்லாமலே...
என் தேசத்தின்...
பாசமிருக்கும்...
காணாமலே...
என் தேசத்தாயின்...
மடிக்கிடைக்கும்...
எந்நாடு என்றாலே
பலநாடும் பயந்தோடும்!!
எந்நாட்டக் கடந்தாலே
சாவும்தான் மெரண்டோடும்!!
காட்டிலுள்ள எங்க "புலி"
காவலுக்குப் போகும்!!
மலர்ந்திடும் "தாமரை"யும்
நீரினைக் காக்கும்!!
மிகஉயர் வீரத்தை
நம் நெஞ்சில் காத்தோம்!
மதங்கொண்ட "யானை"போல்
போரினைப் பார்த்தோம்!
"தாமரை"யும் மலர்ந்திடும் போது
தேனையும் தந்து உயிர்காக்கும்!
ஆலமர விழுதினில் ஏறி
குழந்தைகள் என்றும் விளையாடும்!
இறைவன் கொடுத்திட்ட
எங்கள் உயிர்
எந்நாடே...
எந்தன் உயிரே...
பலமொழிகள் நாட்டில் வாழும்
நாட்டில்மொழி பலவகைப்பூக்கும்
செலிப்போடு மலர்ந்தே நிற்கும்
சிரிப்போடு எந்நேரம்
மலர்மொழிகளும் சொல்லும் எந்நாடு
மகிழ்வோடு நாட்டினைக்காக்கும்...