கர்மவீரர் காமராசர் பாடல்
எங்கள் காமராசர் எங்கள் காமராசர்
எளிமையின் இலக்கணமே எங்கள் காமராசர்
கல்விகண் கொடுத்தவரே எங்கள் காமராசர்
படிக்கப்பள்ளி பல திறந்தார் எங்கள் காமராசர்
பிள்ளைகளின் பசிபோக்க எங்கள் காமராசர் - பள்ளியில்
மதிய உணவு அளித்தவரே எங்கள் காமராசர்
நேர்மை என்ற சொல்லிற்கு எங்கள் காமராசர்
பொதுநல சேவகரே எங்கள் காமராசர்
கர்வமில்லா கர்மவீரர் எங்கள் காமராசர்
கருப்பு காந்தி என்பவரே எங்கள் காமராசர்
பயமறியா பெருந்தலைவர் எங்கள் காமராசர்
துணிவான பேச்சென்றால் எங்கள் காமராசர்
விவசாயம் வாழ வைத்த எங்கள் காமராசர்
வேளாண்மை தொழில் வளர்த்த எங்கள் காமராசர்
விருது நகரின் விருச்சமானார் எங்கள் காமராசர்
ஊருக்கே வெளிச்சமானார் எங்கள் காமராசர்..