ஆக்சிஜன் சிலிண்டர்கள்

ஆக்சிஜன் சிலிண்டர்கள்
========================================ருத்ரா

மனித உயிர்களின் கிட்டங்கியே !
உ.பி யில் எப்படி
எமனுக்கு அடமானம் வைக்கப்பட்டாய்?
மனிதப் பிஞ்சுகள்
மரண தேவனால் தின்னப்பட்டதற்கு
அந்த சில லட்ச ரூபாய்கள்
பாக்கி தான் காரணமா?
உலக மானிடமே
விழித்துக்கொள்!
இந்த வியாபார பொருளாதாரம்
மனிதனை மட்டும் அல்ல
இந்த உலகத்தையே
கரையான்கள் போல அரித்து விடும்!
இந்த கரையான் புற்றுகளிலிருந்து
நம்மைக்காப்பாற்ற
அவதரிக்க வேண்டியவர்கள்
உளுத்துப்போன வால்மீகிகள் அல்ல.
உரத்த விடியலை முழக்கமிடும்
"மார்க்ஸ்" முனிவர்களே ஆகும்.

=====================================

எழுதியவர் : ருத்ரா (14-Aug-17, 1:59 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 85

மேலே